உணவே உன்னத மருந்து: எதிர்ப்பு சக்திக்கு வீட்டிலிருக்கும் மருந்து! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 13, 2021

Comments:0

உணவே உன்னத மருந்து: எதிர்ப்பு சக்திக்கு வீட்டிலிருக்கும் மருந்து!

உணவே உன்னத மருந்து: எதிர்ப்பு சக்திக்கு வீட்டிலிருக்கும் மருந்து!
ஊரடங்கில் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ஆரோக்கியமாக இருக்க மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார், கோட்டூர் அரசு மருத்துவமனை மலர் சித்த மருத்துவர் வித்யாதேவி. கோடை வெயிலால் பக்க விளைவுகள் ஏற்படாமல் தப்பிப்பதும் அவசியம். முடிந்த வரை, அனைத்து உணவுகளையும் சூடாக சாப்பிடுவதால், சளி, இருமல், தொண்டை கரகரப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியும். உணவுப்பொருட்களை 'பிரிட்ஜில்' வைத்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இயற்கை உணவு வாயிலாக, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, தினமும் ஒரு முட்டை, பால் சேர்த்துக்கொள்ளலாம். உணவில் அதிக அளவு பூண்டு, மஞ்சள் துாள், மிளகு, சீரகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். கோடை காலம் என்பதால், வாரத்துக்கு இரண்டு நாள் அசைவ உணவு சாப்பிடலாம். ஆனால், அதிக மசால் 'அயிட்டங்கள்' சேர்க்கப்படும் அசைவ உணவு, எண்ணெய் மிகுந்த பஜ்ஜி, போண்டா போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. இதனால், ஜீரணக்கோளாறு தவிர்க்கப்படும். • தினமும் உணவில் பருப்பு வகைகள், கீரைகள், காய்கறிகள், முளைக்க ட்டிய பயிறு வகைகள், கீரைகளில் சூப் வைத்தும், காய்கறிகளில் 'சாலட்' செய்தும் சாப்பிடலாம். முடிந்த வரை, 'ஐஸ் கிரீம், கூல்டிரிங்கஸ்' தவிர்ப்பது நல்லது. அதிக நீர்ச்சத்துள்ள பழங்கள் சாப்பிடுவது நல்லது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews