Breaking

Saturday, May 29, 2021

கல்வி சார்ந்த ‘வாட்ஸ்ஆப்' குழுக்கள்: தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

கல்வி சார்ந்த ‘வாட்ஸ்ஆப்' குழுக்கள்: தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
அரசுப் பள்ளிகளின் கல்விசார்ந்த கட்செவி அஞ்சல் ('வாட்ஸ்ஆப்) குழுக்களை அதன் தலைமை ஆசிரி யர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. கரோனா பரவலால் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ‘வாட்ஸ்ஆப்’ உள்ளிட்ட செயலிகள் வழியாக ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். சில மாவட்டங்களில் தேர்வுக ளும் நடத்தப்படுகின்றன. அத்தகைய கல்விசார்ந்த வாட்ஸ் ஆப் குழுக்களில் பாடம் தவிர்த்து இதர கருத்துகளை பகிரக்கூ டாது என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி மாணவர்கள், ஆசிரியர்கள் வாட்ஸ்ஆப் குழுக் களில் தேவையற்ற கருத்துகளைப் பதிவிடாமல் பார்த்து கொள்ள வேண்டும். அதனுடன் ஒவ்வொரு வாட்ஸ்ஆப் குழுக்களில் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பெண் ஆசி ரியை அல்லது பெற்றோர் சங்கப் பிரதிநிதிகள் கட்டாயம் இருக்க வேண்டும். அந்த குழுக்களை தலைமையாசிரியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவது அவசியமாகும் என்பது உள்பட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog