Breaking

Monday, May 17, 2021

கொரோனா தடுப்பூசியினால் ஏற்படும் பக்க விளைவுகள் – தேசிய ஆய்வுக்குழு விளக்கம்

இந்தியாவில் கொரோனா தடுப்பூசியினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தேசிய ஆய்வு நிறுவனமான ஏஐஎப்ஐ ஆய்வு மேற்கொண்டு ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி:
கொரோனா தொற்று பரவ தொடங்கிய உடனே மத்திய அரசு அதற்கான தடுப்பூசி தயாரிக்கும் ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ள தொடங்கியது. இதனால் இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் என்ற இரண்டு வகையான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது. ஜனவரி 16ம் தேதி முதல் நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டது.
இதுவரை நமது நாட்டில் 18 கோடி பேருக்கு கொரோனா தொற்றுக்கான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படுவதாகவும், இறக்கும் நிலையும் வருவதாகவும் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றது. பக்க விளைவுகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட ஆய்வு நிறுவனம் அது குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. மொத்தம் 753 மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் மொத்தம் 10 லட்சம் பேரில் 0.61 சதவீதத்தினருக்கு மட்டுமே பக்க விளைவு ஏற்பட்டுள்ளது. மற்ற நாடுகளுடன் ஓப்பிடுகையில் கோவிஷீல்டு ஊசியால் ஏற்பட்டுள்ள பக்க விளைவுகள் மிக குறைவாகத்தான் இங்கு உள்ளது. மேலும், கோவாக்சின் தடுப்பூசியால் ரத்தம் உறைதல், ரத்தக்கசிவு போன்ற பாதிப்புகள் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog