முதுகலை பட்டப்படிப்புக்கு வேறு துறைகளை தேர்வு செய்தவர்களுக்கு, பதவி உயர்வு நிராகரிக்கப்படுவதாக, ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.ஆசிரியப்பணியில் சேர அடிப்படை கல்வி தகுதி கொண்ட பலர், முதுகலை படிப்பில், இளங்கலையில் படித்த துறையை தேர்வு செய்யாமல், அத்துறை சார்ந்த வேறு படிப்புகளை தேர்வு செய்துள்ளனர்.'கிராஸ் மேஜர்' எனும் இம்முறையில் படித்து, பணியில் உள்ளோருக்கு, பதவி உயர்வுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
அதாவது 2:1 என்ற விகிதத்தில் ஒரே துறையை சேர்ந்தவர்களுக்கு இரு இடங்களும், வேறு வேறு துறையில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு ஒரு இடமும் வழங்கப்பட்டது.இந்நிலையில், கடந்தாண்டு வேறு துறையை தேர்வு செய்தவர்களுக்கு, இனி பதவி உயர்வு இல்லை என அரசாணை வெளியிடப்பட்டது. இதனால், உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த பலர், பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக, புகார் எழுந்துள்ளது.அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், 'அரசுப்பள்ளியில் பணியில் சேருவோருக்கு, இடமாறுதல் பெறும் வாய்ப்பு உள்ளதோடு, விரைவில் பதவி உயர்வு கிடைத்துவிடும்.உதவிபெறும் பள்ளியில், காலியிடம் ஏற்பட்டால் தான், பதவி உயர்வு வழங்கப்படும்.
இந்நிலையில், 'கிராஸ் மேஜர்' கொண்டவர்களுக்கு பதவி உயர்வே இல்லை என்ற அரசாணையால், பலரும் பாதிக்கப்பட்டுள்ளோம்.குறிப்பாக, கணிதம் இளங்கலையில் படித்தவர்கள், வணிகவியல், புள்ளியியல் போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெறுவர். அடிப்படை கணிதத்தில் பெரிய வித்தியாசம் இருக்காது.இம்மாதிரி தேர்வு செய்து படித்த பலருக்கு, தற்போது பதவி உயர்வு பெறும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதால், இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். பழைய நடைமுறையை மீண்டும் பின்பற்ற வேண்டும்' என்றனர்.
Search This Blog
Sunday, May 16, 2021
Comments:0
Home
G.O
PROMOTION
TEACHERS
பதவி உயர்வுக்கு குறுக்கே நிற்கும் கிராஸ் மேஜர்! அரசாணையை ரத்து செய்ய ஆசிரியர்கள் கோரிக்கை
பதவி உயர்வுக்கு குறுக்கே நிற்கும் கிராஸ் மேஜர்! அரசாணையை ரத்து செய்ய ஆசிரியர்கள் கோரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.