6-ம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடத்திட்டம் கொண்டுவர கோரிக்கை. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 09, 2021

Comments:0

6-ம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடத்திட்டம் கொண்டுவர கோரிக்கை.

6-ம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடத்திட்டம் கொண்டுவர கோரிக்கை.. திருவாரூர்: கணினி அறிவியல் பாடத்திட்டத்தை 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கொண்டுவர வேண்டும் என தமிழ்நாடு கணினி அறிவியல் பிஎட் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் குமரேசன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது அமைச்சரவைக்கு வாழ்த்துகள். மறைந்த முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் தமிழக அரசுப் பள்ளி மாணவர்களும் கணினி அறிவியல் பாடத்தை கற்க வேண்டும் என்ற உயரிய நோக்கில், கணினி அறிவியல் பாடத்தை பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் நடைமுறைப்படுத்தினார். மேலும், 2009-ம் ஆண்டு சமச்சீர் கல்வியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை தனிப் பாடமாக கொண்டுவந்து, அதற்கு ஆசிரியர்கள் நியமனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அதிமுக அரசு இத்திட்டத்தை கைவிட்டது. இந்நிலையில், தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், 6-ம் வகுப்பு முதல் 10-ம் வரை கணினி அறிவியல் பாடத்திட்டத்தைக் கொண்டுவந்து, கணினி அறிவியல் பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். இதன்மூலம் அவர்களின் குடும்பங்கள் பயனடையும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews