கொ ரோனா தொற்று பரவல் காரணமாக குரூப் 1 பதவிக்கான தேர்வு உட்பட 3 தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் காணமாக தமிழக அரசால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட இருந்த தேர்வுகள், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுகிறது.
இத்தேர்வுகள் நடைபெறும் நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும். அதன்படி, குரூப் 1 பதவியில் காலியாக 69 பணியிடங்களுக்கு மே 28, மே 29, மே 30 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த தேர்வும், ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணிகளில் அடங்கிய 536 பணியிடங்களுக்கு ஜூன் 6ம் தேதி நடைபெறவிருந்த தேர்வும், டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் ஜனவரி 2022ம் பருவத்தில் சேருவதற்கு ஜூன் 5ல் நடைபெறவிருந்த நுழைவுத்தேர்வு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. ராஷ்டரிய இந்திய ராணுவ கல்லூரியில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு விண்ணப்பிக்கும் தேதி மட்டும் மே 21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sunday, May 09, 2021
கொரோனா தொற்று பரவல் காரணமாக குரூப் 1 உள்பட 3 தேர்வுகள் ஒத்திவைப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.