உத்தர பிரதேச மாநிலத்தில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களில் 1,621 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்' என, அம்மாநில ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் புகார் தெரிவித்தது.
ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கத்தின் தலைவர் தினேஷ் சந்திர சர்மா தெரிவித்துள்ளதாவது:உடல் நிலை சரியில்லாத ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என, மே 1ம் தேதி மாநில தலைமைச் செயலர் உறுதியளித்தார். ஆனால், உடல்நிலை பாதிப்பு காரணமாக வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடாத ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது பணியிடை நீக்கம், ஊதிய பிடித்தம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்தச் சூழலில், தேர்தல் பணியில் ஈடுபட்டு கொரோனாவால் உயிரிழந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் எண்ணிக்கை 1,621 ஆக அதிகரித்துள்ளது. இதில் சிலர் அதீத மன உளைச்சல் மற்றும் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையங்களில் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை. எனவே, தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 கோடி நிவாரணத் தொகை வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ரூ.1 கோடி நிவாரணம்:
'மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் பணியின்போது உயிரிழக்கும் தேர்தல் அதிகாரிகளின் குடும்பத்துக்கு குறைந்தபட்சம் ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும்' என, அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த மே 11ம் தேதி தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது
'மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் பணியின்போது உயிரிழக்கும் தேர்தல் அதிகாரிகளின் குடும்பத்துக்கு குறைந்தபட்சம் ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும்' என, அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த மே 11ம் தேதி தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.