தெலுங்கானா மாநிலத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகளில் மாற்றங்களை அறிவித்து மாநில கல்வித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
12ம் வகுப்பு இறுதி தேர்வுகள்:
தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக 12ம் வகுப்பு தேர்வுகள் தள்ளிவைப்பதாக மாநில அரசு முன்னதாக அறிவித்திருந்தது. மேலும், இரண்டாம் ஆண்டு பொதுப் படிப்புகளின் நடைமுறைத் தேர்வுகள் மற்றும் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு தொழிற்பயிற்சி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. அதன்படி, ஜூன் முதல் வாரத்தில் தேர்வு தொடர்பான ஆய்வுகள் தொடரப்பட்டு, குறைந்தது 15 நாட்களுக்கு முன்னர் தேர்வு தேதிகளை அறிவிக்க இருப்பதாக கல்வித்துறை அறிவித்தது. மத்திய அரசு அளித்த 2 விதமான திட்டங்களில் தெலுங்கானா அரசு முதல் திட்டத்தை தேர்வு செய்திருப்பதாக அறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி, மூன்று மணி நேர தேர்வானது 90 நிமிடங்களாக குறைக்கப்பட உள்ளது. மேலும், வினாத்தாள்கள் முன்னரே அச்சிடப்பட்டுள்ள நிலையில், வினாத்தாளில் இருக்கும் 50% அளவிலான கேள்விகளை மட்டும் மாணவர்கள் தேர்வு செய்ய அறிவுறுத்தும் படி முடிவு செய்திருப்பதாக கல்வித்துறை செயலாளர் சந்தீப் குமார் சுல்தானியா தெரிவித்துள்ளார். மேலும், மாணவர்களுக்கு இறுதியில் 100% மதிப்பெண்களுக்கு மதிப்பிடப்படும். ஜூலை மாத நடுப்பகுதியில் அல்லது ஆகஸ்ட் மாத இறுதிக்குள் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக தேர்வுகளுக்கு வர முடியாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படும் என்றும், அனைத்து நடைமுறைகளும் கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்படும் என்றும் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.