12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு போதிய அவகாசம் - மருத்துவமனைக்கு 75 ஆக்சிசன் செறிவூட்டிகள் பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 31, 2021

Comments:0

12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு போதிய அவகாசம் - மருத்துவமனைக்கு 75 ஆக்சிசன் செறிவூட்டிகள் பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 75 ஆக்சிசன் செறிவூட்டிகள் பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
தொடர்ந்து ஸ்ரீராமகிருஷ்ணா மடம் சார்பில கொரோனா நிவாரணத்தை வழங்கினார். பின்னர் பள்ளிக் கல்வி துறை அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:
தஞ்சை மாவட்டத்திற்கு ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவிகள் தேவை என சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் மூலமும், அரசுத்துறை உயர் அலுவலர்கள் மூலமும் கோரிக்கை விடுத்து அந்த அடிப்படையில் நூற்றி ஐம்பது ஆக்சிசன் செறிவூட்டும் கருவிகள் வந்துள்ளது. அதில் 75 கருவிகளை திருச்சி மாவட்டத்திற்கும், 75 கருவிகளை தஞ்சை மாவட்டத்திற்கும் வழங்கியுள்ளோம். ஆக்சிஜன் சிலிண்டர் இருந்தாலும் கூட ஒவ்வொரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தலா ஒரு ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவியாவது இருக்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து இருக்கிறோம். பொதுமக்களிடையே தடுப்பூசி போடுவது குறித்து தற்போது கூடுதலான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதுவரை இரண்டு லட்சம் பேருக்கு மேல் தஞ்சை மாவட்டத்தில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் ஒவ்வொரு மருத்துவமனைக்கும் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறோம். பொதுமக்கள் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அலைய வேண்டி வராமல், அந்தந்த பகுதியிலேயே அவர்களுக்குரிய மருத்துவ வசதிகளை வழங்கும் வகையில் நோய் தொற்றை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். நிகழ்ச்சியில் கலெக்டர் கோவிந்தராவ், தமிழக அரசின் தலைமை கொறடா கோவி.செழியன், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டிகேஜி.நீலமேகம், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதிராம்பட்டினம்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று அதிராம்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் டாக்டரிடம் விவரம் கேட்டு அறிந்தார். தன்னார்வலர்களால் வழங்கப்பட்ட 2 ஆக்சிஜன் செறிவூட்டிகருவிகளை அரசு மருத்துவமனைக்கு ஒப்படைத்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் கோவிந்தராவ், எஸ்பி தேஷ்முக் சேகர் சஞ்சய், எம்பி பழனி மாணிக்கம், திமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஏனாதி பாலு, பட்டுக்கோட்டை எம்எல்ஏ அண்ணாதுரை உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தஞ்சை மாவட்டத்தில் தொற்று குறைந்து வருகிறது பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று மாலை ஆய்வு செய்தார். அதற்கு முன்னதாக பேருந்து நிலையத்தில்ஓவியர்களால் வரையப்பட்டிருந்த கொரோனா ஓவியத்தை பார்வையிட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டார். தொடர்ந்து பட்டுக்கோட்டை பெருமாள்கோயில்புதுரோட்டில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டுக்கு சென்று அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களிடம் பேசினார். பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறுகையில், தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளொன்றுக்கு 1,000 என்று இருந்தது தற்போது 800 ஆக குறைந்து வருகிறது. தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளில் 5 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களது நிலைமை குறித்து நிச்சயமாக தமிழக முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் சென்று அவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
நீட் தேர்வை நிச்சயமாக எந்த காலத்திலும் தமிழகத்தில் நுழைய விடமாட்டோம். அதற்காக சட்டமன்றம் கூடியபின்பு தீர்மானம் போடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு போதிய அவகாசம் கொடுக்கப்படும். முன்னதாக மதுக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews