Breaking

Tuesday, April 13, 2021

நாளை அனைத்து வகை பள்ளிகளிலும் நேரடி மற்றும் 'ஆன்லைன்' வகுப்புகளுக்கு விடுமுறை

தமிழ் புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் பிறந்த நாளை ஒட்டி, அனைத்து வகை பள்ளிகளுக்கும், நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பாடத் திட்டத்தை பின்பற்றும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளில், பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கும், நேரடி வகுப்புகள் நடக்கின்றன.இந்நிலையில், இன்று தெலுங்கு வருட பிறப்பு கொண்டாடப்படுவதால், அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாளை, தமிழ் புத்தாண்டு மற்றும் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாடப்படுவதால், தேசிய அளவில், விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே, நாளை அனைத்து வகை பள்ளிகளிலும் நேரடி மற்றும் 'ஆன்லைன்' வகுப்புகளுக்கு விடுமுறை விட வேண்டும் என, பள்ளி கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog