மாணவர்கள் கூடுதல் திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும்: பேராசிரியர் குணசேகரன் அறிவுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 01, 2021

Comments:0

மாணவர்கள் கூடுதல் திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும்: பேராசிரியர் குணசேகரன் அறிவுறுத்தல்

வேலை வாய்ப்புகளை எளிதில் பெற மாணவர்கள் கல்வியோடு கூடுதல் திறமைகளையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பேராசிரியர் குணசேகரன் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். தங்கவயல் அரசு முதல் நிலை கல்லூரியில் புதிய மாணவர்களுக்கு வரவேற்பும், என்.சி.சி, உள்ளிட்ட மாணவர் திறன் மேம்பாட்டு குழுக்களின் தொடக்க விழாவும் நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதல் நிலை கல்லூரியின் முன்னாள் எச் ஒ.டி பேராசிரியர் சி.குணசேகரன் பேசும் போது,``இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புகளை பெற பட்ட படிப்பு மட்டுமே போதுமானதாக இருப்பதில்லை, அதற்கு கூடுதல் திறமைகளும் தேவைப்படுகிறது. மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சிகளை அளிப்பதற்கு அரசு கல்லூரிகளில் பல குழுக்கள் உள்ளது.
ஏப்.30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு அவற்றில் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்று மாணவர்கள் பயன் படுத்தி கொள்ள வேண்டும். சாதனையாளர்களை பார்த்து நாமும் அது போல் முன்னேறி சாதனை படைக்க முடியும் என்ற உறுதி கொள்ள வேண்டும்’’ என்றார். நிகழ்ச்சியில் தலைமை தாங்கி பேசிய அரசு முதல் நிலை கல்லூரி முதல்வர் பேராசிரியர் எம். கிருஷ்ணமூர்த்தி பேசும் போது, 13 ஆண்டுகளுக்கு முன்பு அரசு கல்லூரியில் குறைந்த அளவிலேயே மாணவர் சேர்க்கை இருந்தது. தற்ேபாது தரமான கல்வி, அதிக அளவு தேர்ச்சி விகிதம், மாணவர்களிடையே ஒழுக்கம், உயர் பண்பு ஆகிய காரணங்களால் இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர் சேர்க்கை உள்ளது. புதிய மாணவர்கள் பழைய மாணவர்களிடமிருந்து நல்ல ஒழுக்கம் பண்புகளை கற்றுக் கொள்ள வேண்டும்’’ என்றார்.
கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் 8 ஆசிரியர்களுக்கு கொரோனா

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews