தமிழக பள்ளிக் கல்வித்துறையில் 4970 பணியிடங்கள் – 3 ஆண்டிற்கு தொடர் நீட்டிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 28, 2021

Comments:0

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் 4970 பணியிடங்கள் – 3 ஆண்டிற்கு தொடர் நீட்டிப்பு!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 2011-12 ஆம் கல்வியாண்டில் தற்காலிகமாக பணி நியமனம் வழங்கப்பட்ட 3550 பட்டதாரி ஆசிரியர்கள் உட்பட 4970 பணியிடங்களுக்கு 2021-2023 என மூன்று ஆண்டுகள் தொடர் நீட்டிப்பு வழங்கப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை ஆணை பிறப்பித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறை ஆணை: தமிழகத்தில் 2011-12 ஆம் கல்வியாண்டில் 710 ஊராட்சி ஒன்றிய, மாநகராட்சி, நகராட்சி, நலத்துறை நடுநிலைப்‌ பள்ளிகள்‌ உயர்நிலைப்‌ பள்ளிகளாக தரம்‌ உயர்த்தியும்‌, அவ்வாறு தரம்‌ உயர்த்தப்பட்ட 710 பள்ளிகளுக்கும்‌, ஒரு உயர்நிலைப்‌ பள்ளிக்கு 5 பட்டதாரி ஆசிரியர்‌ பணியிடம்‌ வீதம்‌ 3,550 பட்டதாரி ஆசிரியர்‌ பணியிடங்களும்‌, ஒரு ஆய்வக உதவியாளர்‌ பணியிடம்‌ வீதம்‌ 710 ஆய்வக உதவியாளர்‌ பணியிடங்களும்‌, ஒரு இளநிலை உதவியாளர்‌ பணியிடம்‌ வீதம்‌ 710 இளநிலை உதவியாளர்‌ பணியிடங்கள்‌ ஆக மொத்தம்‌ 4,970 பணியிடங்கள்‌ தோற்றுவித்து ஆணைகள்‌ வெளியிடப்பட்டன. மத்திய அரசின்‌ அனைவருக்கும்‌ இடைநிலைக்‌ கல்வித்‌ திட்டத்திற்கான 2019-14ஆம்‌ ஆண்டிற்கான திட்ட ஒப்புதல்‌ குழுவில்‌ 2011-12ல்‌ அனுமதிக்கப்பட்ட 710 உயர்நிலைப்‌ பள்ளிகளில்‌ 158 பள்ளிகளுக்கான ஒப்புதல்‌ நீக்கம்‌ செய்யப்பட்டது. எனினும்‌, இப்பள்ளிகள்‌ மாணவர்களின்‌ கல்விநலன்‌ கருதி தொடர்ந்து செயல்பட அனுமதித்தும்‌, இப்பள்ளிகளில்‌ பணிபுரியும்‌ ஆசிரியர்‌ மற்றும்‌ ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான செலவினம்‌ மாநில நிதியில்‌ மேற்கொள்ள அனுமதித்தும்‌ ஆணை வழங்கப்பட்டது. மேற்குறிப்பிட்டுள்ள 710 உயர்நிலைப்‌ பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட 9,550 பட்டதாரி ஆசிரியர்‌ பணியிடங்கள்‌, 710 ஆய்வக உதவியாளர்‌ பணியிடங்கள்‌, 710 இளநிலை உதவியாளர்‌ பணியிடங்கள்‌ ஆக மொத்தம்‌ 4,970 பணியிடங்களுக்கு 01.01.2018 முதல்‌ 31.12.2020 வரை மூன்றாண்டிற்கு தொடர்‌ நீட்டிப்பு வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews