அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (22-04-2021) முதல் மே 31ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை
நாடு முழுவதும் பெருகி வரும் நோய்த்தொற்று காரணமாக பல மாநிலங்களில் செயல்பட்டு வந்த பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை, (ஏப்ரல் 22) முதல் கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் கன்வர் பால் குஜ்ஜார் தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு வீட்டில் இருந்தே வேலை – அரசுக்கு கோரிக்கை!!
இது குறித்து அவர் ட்விட்டர் மூலம் தெரிவிக்கையில், ‘ஹரியானா மாநில பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை அறிவிக்கப்படுகிறது. பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கோடை விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதன்படி கோடை விடுமுறை நாளை (22-04-2021) துவங்கி மே மாதம் 31 ஆம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்படுகிறது’ என தெரிவித்துள்ளார். முன்னதாக 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டு வந்த வகுப்புகளில் இருந்து ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் விடுமுறை அளிப்பதாக அம்மாநிலத்தின் கல்வி அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்புகள் அரசு, தனியார் அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கா? என்னும் சரியான தகவல்கள் கொடுக்கப்படவில்லை. இருந்தாலும் இது குறித்த மேலும் சில அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கொரோனா பரவல் காரணமாக டெல்லியில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் இன்று முதல் ஜூன் 9ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.