பள்ளி நிதியில் லட்சக்கணக்கில் முறைகேடு செய்த 2 தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 21, 2021

Comments:0

பள்ளி நிதியில் லட்சக்கணக்கில் முறைகேடு செய்த 2 தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

பழங்குடியின உண்டு உறைவிட பள்ளி விடுதியில் படிக்கும் மாணவர்களின் உணவிற்காக வழங்கப்பட்ட நிதியில் லட்சக்கணக்கில் முறைகேடு செய்ததாக இரு தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நீலகிரி மாவட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் 22 இடங்களில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகள் மற்றும் விடுதிகள் உள்ளன. கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. அப்போது பழங்குடியின மாணவர்களுக்கு உணவு மற்றும் உதவித்தொகை என ரூ.7,­300 வழங்க நிதி ஒதுக்கப்பட்டது.
தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பள குறைப்பு – புதிய ஊதிய விதி அமலில் சிக்கல்!!
இந்த தொகையை தலைமை ஆசிரியர்கள், பழங்குடியின மாணவர்கள் அல்லது பெற்றோர்கள், பாதுகாவலர் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். அதை உறுதிப்படுத்தும் பொருட்டு அவர்களது கைெயழுத்து பெற்று அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்து இருப்பதாக சர்ச்சை எழுந்தது. கூடலூர் கல்வி மாவட்டத்தில் உள்ள சில உண்டு உறைவிட பள்ளிகளில் அதன் தலைமை ஆசிரியர்கள் தங்களின் மனைவி, உறவினர், விடுதி சமையலர் போன்றவர்களின் வங்கிக்கணக்கில் பணத்தை மாற்றி கையாடல் செய்துள்ளனர். குறிப்பாக, ஒரு விடுதி சமையலரின் மனைவி வங்கி கணக்கில் மட்டும் 14 பழங்குடியின மாணவர்களின் பணத்தை செலுத்தி முறைகேடு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில் இரு தலைமை ஆசிரியர்கள் முறைகேடு செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தேவாலா உயர்நிலை உண்டு உறைவிட பள்ளி தலைமையாசிரியர் பாக்கியசேனன், பொன்னானி நடுநிலை உண்டு உறைவிட பள்ளி தலைமையாசிரியர் சேகர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ஆதார் அட்டையை லாக் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!!

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews