தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இருந்த போதிலும் பள்ளிக்கு ஆசிரியர்கள் வழக்கமாக வந்து செல்கின்றனர். எனவே அவர்கள் வீட்டில் இருந்து இணைய வழியில் பணியாற்றிட அரசு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாம் அலை தாக்கம்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. எனவே கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் வராமல் இருந்தாலும் ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வந்து, ஆன்லைன் வகுப்புகள் மற்றும் அலுவலக வேலைகளை செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை மாவட்ட வாரியாக - Media-Bulletin - 21.04.2021 - PDF
கொரோனா பேரிடர் காலத்தில் ஆசிரியர்கள் பல சிரமங்களுக்கு நடுவே பள்ளிக்கு வருகின்றனர். எனவே தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச் செயலாளர் நா.சண்முகநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். அதில், “கொரோனா காரணமாக அனைத்து வகையான கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இருந்த போதிலும் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறை ஆசிரியர்கள் பள்ளிக்கு வழக்கம் போல் வந்து பணியாற்றி செல்ல வேண்டும்.
இதனால் பல ஆசிரியர்களுக்கு கொரோனா பரவல் ஏற்பட வாய்ப்புள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு வராத நேரத்தில் ஆசிரியர்கள் மற்றும் வருவது தேவையற்றது. எனவே அதனை கருத்தில் கொண்டு ஆசிரியர்களை வீட்டில் இருந்து இணைய வழியில் பணியாற்றிடும் வகையில் தமிழக அரசு வழிவகை செய்திட வேண்டும்”, இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. எனவே கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் வராமல் இருந்தாலும் ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வந்து, ஆன்லைன் வகுப்புகள் மற்றும் அலுவலக வேலைகளை செய்து வருகின்றனர்.
இதனால் பல ஆசிரியர்களுக்கு கொரோனா பரவல் ஏற்பட வாய்ப்புள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு வராத நேரத்தில் ஆசிரியர்கள் மற்றும் வருவது தேவையற்றது. எனவே அதனை கருத்தில் கொண்டு ஆசிரியர்களை வீட்டில் இருந்து இணைய வழியில் பணியாற்றிடும் வகையில் தமிழக அரசு வழிவகை செய்திட வேண்டும்”, இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.