அண்ணா பல்கலை, செமஸ்டர் தேர்வு முடிவுகள் குறித்து, இன்று உயர் கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்.சென்னை, அண்ணா பல்கலை இணைப்பில், 550க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் செயல்படுகின்றன.
இவற்றில், தன்னாட்சி அந்தஸ்து பெறாத கல்லுாரி மாணவர்களுக்கு, பல்கலை சார்பில் தேர்வு நடத்தப்படுகிறது.முடிவு நிறுத்தம்நடப்பு கல்வி ஆண்டில், டிசம்பரில் நடத்த வேண்டிய தேர்வுகள், இந்த ஆண்டு பிப்.,யில் நடத்தப்பட்டன. இதற்கான முடிவுகள், கடந்த வாரம் வெளியிடப்பட்டன.மொத்தம், 3.5 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில், 30 சதவீதம் பேர் மட்டுமே, தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு காரணங்களை கூறி, மற்றவர்களுக்கு தேர்வு முடிவு நிறுத்தப்பட்டுள்ளது. முக்கிய முடிவுகள்அண்ணா பல்கலையின், 'ஆன்லைன்' தேர்வுக்கான, 'சாப்ட்வேர்' பிரச்னை தான் இதற்கு காரணம் என, மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.அதனால், நன்றாக படிக்கும் மாணவர்களும், முறைகேடில் ஈடுபட்டது போல, சாப்ட்வேரில் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டு உள்ளது.இந்நிலையில், முடிவுகள் நிறுத்தப்பட்ட விவகாரம் மற்றும் ஆன்லைன் தேர்வு முறையில் நடந்துள்ள குளறுபடிகள் குறித்து, உயர் கல்வி துறை அதிகாரிகள், இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.
அண்ணா பல்கலை நிர்வாக ஒருங்கிணைப்பு தலைவர் அபூர்வா தலைமையில், சென்னை, தலைமை செயலகத்தில் நடக்கும் இக்கூட்டத்தில், இவ்விவகாரம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என, தெரிகிறது.
Search This Blog
Monday, April 19, 2021
Comments:0
தேர்வு குளறுபடிகள் குறித்து அதிகாரிகள் இன்று ஆலோசனை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.