எலுமிச்சை சாறை மூக்கில் விட்டால் உடலில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும் என்று கர்நாடக பாஜக முன்னாள் எம்.பியும், தொழிலதிபருமான விஜய் சங்கேஷ்வர் கூறியிருந்த நிலையில், ராய்ச்சூர் பகுதியைச் சேர்ந்த பசவராஜா (43) என்ற ஆசிரியர் தனது மூக்கில் எலுமிச்சை சாற்றை செலுத்தியதை அடுத்து உடல்நிலை மோசமாகி உயிரிழப்பு!
மூக்கு வழியே எலுமிச்சை சாறை செலுத்தினால் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும் என்று வதந்தியை நம்பி ஆசிரியர் ஒருவர் மூக்கு வழியே ஆக்சிஜனை செலுத்தி பரிதாபமாக பலியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 44 வயது ஆசிரியர் பசவராஜ். இவர் சமீபத்தில் சமூக வலைதளங்கள் மூலம் மூக்கு வழியில் எலுமிச்சை சாறு செலுத்தினால் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும் என்பதை படித்துள்ளார். இதனை தனக்கு செய்து பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து மூக்கு வழியை எலுமிச்சை சாறை செலுத்தியுள்ளார்
உடனடியாக அவருக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவரது உறவினர்கள் மருத்துவமனையில் அவரை அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்
சமூக வலைத்தளங்களில் வெளியான வதந்தியை நம்பி மூக்கு வழியே ஆக்சிஜனை செலுத்தி ஆசிரியர் பசவராஜா பலியானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் முன்னாள் பாஜக எம்பி ஒருவர் மூக்கு வழியே எலுமிச்சை சாறை செலுத்தினால் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தொடரும்: கட்டுப்பாடுகளுடன் மறுஅறிவிப்பு வரும் வரை நீட்டிப்பு..! தமிழக அரசு அறிவிப்பு
Search This Blog
Friday, April 30, 2021
Comments:0
மூக்கின் வழியே எலுமிச்சை சாறு - ஆசிரியர் பலி!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.