நாடு முழுவதும், கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவரும் நிலையில், தமிழகத்தில் கொரேனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மே 2 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால், இந்திய அளவில் நாள் ஒன்றுக்கு 3.5 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தில் திரையரங்குகள், பெரிய கடைகள் அடைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் நாடு முழுவதிலும் 15 சதவீதத்துக்கும் கூடுதலாக கொரோனா பாதிப்பு விகிதம் இருக்கும் 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு கொண்டுவருவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் கொரோனா பரவல் சங்கிலியை துண்டிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முழு ஊரடங்கு கொண்டுவரும் பட்சத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கு கடைகள் திறந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறைதான் இறுதி முடிவு எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடைபெற உள்ளது. அதன் பின்னர் ஊரடங்கு தொடர்பான புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட அறிவிப்புகளுக்கும், அத்தியாவசியமாக கடைகளை திறந்து வைப்பதற்கான அறிவிப்பிற்கும் வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கும், மற்ற நாட்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 வரையில் இரவு நேர ஊரடங்கும் நடைமுறையில் உள்ளன. அத்துடன் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ள என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மறுஅறிவிப்பு வரும் வரை நீட்டிப்பு என தமிழக அரசு அறிவித்துள்ளது.
* தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு தொடரும்.
* தமிழகத்தில் சினிமா படப்பிடிப்பு, சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்த அனுமதி
* முழு ஊரடங்கு அன்று சென்னையில் குறைந்த அளவில் மெட்ரோ ரயில்களை இயக்க அனுமதி
* மே 2 வாக்கு எண்ணிக்கை தினத்தன்று முழுஊரடங்கு இருந்தாலும் வேட்பாளர்கள், முகவர்கள் உள்ளிட்டோருக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.
Search This Blog
Thursday, April 29, 2021
Comments:0
Home
PEOPLE'S
TAMILNADU
இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தொடரும்: கட்டுப்பாடுகளுடன் மறுஅறிவிப்பு வரும் வரை நீட்டிப்பு..! தமிழக அரசு அறிவிப்பு
இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தொடரும்: கட்டுப்பாடுகளுடன் மறுஅறிவிப்பு வரும் வரை நீட்டிப்பு..! தமிழக அரசு அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.