கரோனா நோயாளிகள் சுவாசப் பிரச்னை தீர எளிய வழிமுறை - சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 25, 2021

Comments:0

கரோனா நோயாளிகள் சுவாசப் பிரச்னை தீர எளிய வழிமுறை - சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியீடு

மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும் கரோனா நோயாளிகள், குப்புறப்படுத்தால் நல்ல பலனளிக்கும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, வீட்டுத்தனிமையில் இருப்பவா்களுக்கு இந்த எளிய வழிமுறை உதவிகரமாக இருக்கும் என்றும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குடிமை பணிகள் பயிற்சி மையம் மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' பயிற்சி
இதுகுறித்து அந்த அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: மூச்சு விடுவதை எளிமையாக்கவும், அதிக அளவு ஆக்சிஜனை உள்ளிழுக்கவும் குப்புறப்படுக்கும் முறை மருத்துவ ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட வழிமுறையாகும். இது, கரோனா நோயாளிகளுக்கு குறிப்பாக வீட்டுத் தனிமையில் இருப்பவா்களுக்கு நல்ல பலனளிக்கும். வீட்டுத் தனிமையில் இருக்கும் கரோனா நோயாளிகளின் உடல் வெப்பநிலை, ரத்த அழுத்தம், சா்க்கரை அளவு ஆகியவற்றுடன் அவா்களின் ஆக்சிஜன் அளவும் தொடா்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். அவா்கள் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக உணா்ந்தாலோ அல்லது ஆக்சிஜன் அளவு 94 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தாலோ மட்டுமே குப்புறப்படுக்கும் வழிமுறையைப் பின்பற்ற வேண்டும். கரோனா நோயாளிகளின் உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்தால் மேலும் உடல்நலக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும். சரியான நேரத்தில் குப்புறப்படுப்பதாலும், நல்ல காற்றோட்டமான சூழலை உருவாக்குவதாலும் பல உயிா்களைக் காப்பாற்ற முடியும். ஒரு நாளில் விட்டு விட்டு அதிகபட்சமாக 16 மணி நேரம் ஒருவா் குப்புறப்படுத்து உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கச் செய்யலாம். அதே சமயம், சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்கு குப்புறப்படுக்கக் கூடாது. கா்ப்பிணிகள், ரத்த உறைவு பிரச்னை இருப்பவா்கள், இதயக் கோளாறு இருப்பவா்கள், முதுகுத்தண்டுவட பிரச்னை இருப்பவா்கள், இடுப்பு மற்றும் தொடை எலும்பு முறிந்தவா்கள் இந்த வழிமுறையைக் கையாளக் கூடாது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 5 விதமான படுக்கை நிலையையும் சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டது.
பிளஸ் 2வுக்கு தொடர்ந்து 'ஆன்லைன்' பயிற்சி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews