Breaking

Sunday, April 25, 2021

YouTube வழியே குடிமைப் பணி தேர்வு பயிற்சி: தமிழக அரசு

சமூக ஊடகமான யூ-டியூப் வழியே குடிமைப் பணித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று அண்ணா மேலாண்மை நிலையம் அறிவித்துள்ளது.
ஒரு வாரத்தில் 15 ஆசிரியர்களுக்கு கொரோனாதொற்று உறுதி! இதுகுறித்து, அந்த நிலையத்தின் இயக்குநர் வெ.இறையன்பு, வெள் ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: கரோனா இரண்டாவது அலை பர வலைக் கருத்தில் கொண்டு அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தில் நேர்முகமாக நடைபெறும் அனைத்து வகையான பயிற்சிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த தடை காரணமாக பயிற்சி நிலையத்தில் பயின்று வந்த மாணவர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர்.
தமிழகத்தில் நாளை முதல் வங்கிகள் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிப்பு
இதைத் தொடர்ந்து, சமூக ஊடகமான யூ-டியூப் வழியே குடிமைப் பணித் தேர்வுக்கான பயிற்சிகள் அளிக்கப்படும். AICSCC TN மற்றும் AIM TN ஆகிய யூ-டியூப் குறியீடுகள் அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தின் சார்பில் இயக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் வழியே குடிமைப் பணித் தேர்வு மாணவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படும். தேர்வுக்கான உரிய விடியோக்கள் அதில் பதிவேற்றம் செய்யப்படும். மேலும், அரசு ஊழியர்களுக்கான மேலாண்மை பயிற்சியும் அதன் வழியே அளிக்கப்படும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog