குடிமை பணிகள் பயிற்சி மையம் மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' பயிற்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 25, 2021

Comments:0

குடிமை பணிகள் பயிற்சி மையம் மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' பயிற்சி

அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையம் சார்பில், மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வாயிலாக, பாடத்திட்டங்கள் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – ரூ.1,20,000 மாத ஊதியத்தில் பணி!! தமிழகத்தில், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போது, அரசு அலுவலர்களுக்கும், குடிமை பணிகள் பயிற்சி மாணவர்களுக்கும், சில கட்டுப்பாடுகளுடன், நேர்முக பயிற்சிகள் நடத்தப் பட்டன. இப்பயிற்சிகளை இணையம் வழியே நடத்தும் வகையில், 'AICSCC TN' மற்றும், 'AIM TN' என்ற, 'யூடியூப்' சேனல்கள் துவக்கப்பட்டன. இதில், ஏ.ஐ.சி.எஸ்.சி.சி., - டி.என்., சேனலில், அகில இந்திய குடிமைப் பணி தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், 433 தலைப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டு, 19 ஆயிரத்து, 300 சந்தாதாரர்களுடன் செயல்படுகிறது.ஏ.ஐ.எம்., - டி.என்., சேனலில், அரசு அலுவலர்களுக்கான செய்திகள் வழங்கப்படுகின்றன. இதில், 115 தலைப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டு, 3,430 சந்தாதாரர்களுடன் இயங்கி வருகிறது. பேரிடர் மேலாண்மை,நேர மேலாண்மை,அலுவலக நடைமுறை,பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன், இணைய வழி பாதுகாப்பு வழிமுறைகள், தகவல் பெறும் உரிமை சட்டம், மின் ஆளுமை, பேரிடர் மேலாண்மை போன்ற தலைப்புகளில், உரைகள் ஒளிபரப்பப் படுகின்றன.தற்போது, கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக, அண்ணா மேலாண்மை நிலையத்தில், தற்காலிகமாக பயிற்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை மாவட்ட வாரியாக - Media Bulletin 24.04.2021 - PDF
மாணவர்கள் பாதிப்படையாத வகையில், சம கால நிகழ்வுகளில் ஏற்படும், சமூக பொருளாதார தாக்கத்தை எதிர்கொள்ளும் நடைமுறை குறித்த பல்வேறு உரைகள், இரண்டு சேனல்களிலும், குறிப்பிட்ட கால இடைவெளியில் பதிவேற்றம் செய்யப்படும்.இதை மாணவர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, அண்ணா மேலாண்மை நிலையம் இயக்குனர் இறையன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews