சென்னை பெருநகர போக்குவரத்து காவல் - பத்திரிகைச் செய்தி-24.04.2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 24, 2021

Comments:0

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் - பத்திரிகைச் செய்தி-24.04.2021

சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 24.04.2021 இரவு 10.00 மணி முதல் 26.04.2021 தேதி அதிகாலை 04.00 மணி வரை தமிழக அரசு எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. அதன்படி 25.04.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்து கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது.
தேசிய கல்விக்கொள்கையின் மாநில மொழிபெயர்ப்பில் தமிழ் புறக்கணிப்பு அநாவசியமாக வீட்டை விட்டு வெளியே வருவதையும், தெருக்களில் சமூக இடைவெளியின்றி கூட்டமாக கூடி நிற்பதையும் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அவசர மருத்துவ தேவைகளுக்கும் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் பணிகளுக்காக தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. காய்கறி கடைகள் 05.00 மணி முதல் நண்பகல் 13.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. உணவகங்களில் இருந்து வீடுகளுக்கு பார்சல் உணவு வழங்கும் நிறுவனங்கள் காலை 06.00 மணி முதல் 10.00 மணி வரை நண்பகல் 12.00 மணி முதல் 15.00 மணி வரை, சாயங்காலம் 18.00 மணி முதல் இரவு 21.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. திருமணத்திற்கு 100 நபர்கள் மிகாமலும் இறுதிச் சடங்கிற்கு 50 நபர்கள் மிகாமலும் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுகிறது. இதைத் தவிர வேறு எந்தவித வாகனங்களுக்கும் அனுமதி இல்லை. மீறிவரும் வாகனங்கள் மீது குற்றவியல் நடைமுறை பிரிவு 144ன் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இதற்காக நகரம் முழுவதும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. வரும் மே, ஜூன் மாதங்களில் 80 கோடி ஏழை மக்களுக்கு 5 கிலோ இலவச ரேஷன்: மத்திய அரசு அறிவிப்பு
இது தொடர்பாக சந்தேகங்கள் இருப்பின் போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறை எண்கள் 044-23452330/ 044-23452362 எனும் எண்களை தொடர்பு கொண்டு விளக்கம் பெற்றுக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews