கொரோனா வைரஸ் நோயை முற்றிலும் தடுத்திடும் விதமாக சமூக தனிமைப்படுத்துதலை தீவிரப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசின் உத்தரவின் பேரில், ஞாயிற்றுக்கிழமை (25.04.2021) அன்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கின் போது அரசினால் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த இரவு நேர ஊரடங்கு சனிக்கிழமை இரவு 10.00 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 04.00 மணி வரை அமலில் இருக்கும். முழு ஊரடங்கு அமலில் உள்ள ஞாயிற்றுக்கிழமை அன்று இறைச்சிக் கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் செயல்பட அனுமதி இல்லை. அத்தியாவசிய பணிகளான பால் விநியோகம், குடிநீர் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவ துறை சேர்ந்த பணிகள், விவசாயிகளின் விலை பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் மற்றும் எரிபொருள் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி உண்டு.
2) உணவு விநியோகத்தைப் பொருத்தமட்டில் காலை 06.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 1200 மணி முதல் 03.00 வரையிலும் மாலை 06.00 முதல் இரவு 09.00 மணி வரையிலும் பார்சல் சேவை அனுமதிக்கப்பட்டுள்ளது. Swiggy, Zomato போன்ற மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. மற்ற மின் வணிகம் நிறுவனங்களின் சேவைகளுக்கு முழு ஊரடங்கு தினமான ஞாயிற்றுக் கிழமையில் அனுமதி இல்லை. அரசு உத்தரவின்படி தடையின்றி செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் (Continuous process industries) மருந்து, உணவு பொருட்கள் மற்றும் கால்நடை தீவளங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஏற்றுமதி நிறுவனங்கள் உள்ளிட்ட அரசினால் அனுமதிக்கப்பட்டுள்ள இனங்கள் மட்டும் செயல்பட அனுமதி உண்டு.
3) ஏற்கனவே, நிர்ணயிக்கப்பட்ட திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் அரசின் நிலையான வழிகாட்டுதலின்படி 100 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ளலாம். இறப்பினை பொருத்தமட்டில் 50 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ளலாம். அரசால் வெளியிடப்பட்ட கட்டுபாடுகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். ஊடகம் மற்றும் பத்திரிக்கை துறையினர் தொடர்ந்து பணிபுரியலாம்.
4) எனவே, அரசினால் வெளியிடப்பட்டுள்ள முழுமையான வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது பின்பற்றல் வேண்டுமெனவும், அரசினால் அனுமதிக்கப்பட்டுள்ள இனங்கள் தவிர இதர நிறுவனங்கள் மற்றும் கடைகள் செயல்பட அனுமதி இல்லையென்றும், முழு ஊரடங்கு அமலில் உள்ள காலங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே இருக்க வேர்டுமெனவும், கிருமி நாசினி பயன்படுத்துதல், முகக்கவசம். அணிதல், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றுதல் ஆகியவற்றினை முழுமையாக கடைபிடித்து கொரோனா நோய்த் தொற்று திருப்பூர் மாவட்டத்தில் மேலும் பரவாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், முழு ஊரடங்கு அமலில் உள்ள போது விதிகளை மீறுவோர் மீது வழக்கு பதிவுகள் போன்ற கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், திருப்பூர், மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
Search This Blog
Saturday, April 24, 2021
Comments:0
மாவட்ட ஆட்சியர், திருப்பூர் - பத்திரிக்கைசெய்தி - நாள்: 24.04.2021.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.