ஆதார் அட்டையை லாக் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 21, 2021

Comments:0

ஆதார் அட்டையை லாக் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!!

அரசு தேவைகளுக்கு முக்கியமான ஆவணமாக ஆதார் அட்டை கருதப்படுகிறது. இந்த ஆதார் அட்டையை தொலைத்து விட்டால் எளிய வழிமுறையின் மூலம் ஆதார் எண்ணை லாக் மற்றும் அன்லாக் செய்து கொள்ளலாம். ஆதார் அட்டை லாக் செய்வது? வங்கிக் கணக்கு துவங்குவது முதல் முக்கியமான அரசு தேவைகள் அனைத்திற்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது துவக்கி கல்லூரிகள் சேர்க்கை, தனி செயல்பாடுகள் என அனைத்துக்கும் மத்திய அரசின் ஆதார் அட்டை அவசியம். இந்த ஆதார் அட்டைகள் தொலைந்து விட்டால் அது பல சிக்கல்களை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. தொலைந்த ஆதார் அட்டையில் உள்ள எண்ணை வைத்து உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து எளிதாக பணம் எடுத்துக்கொள்ள முடியும்.
தமிழக கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – நடப்பு கல்வியாண்டில் தாமதம்!
ஏனென்றால் ஆதார் அட்டையுடன் தொலைபேசி எண், பான் எண், வங்கி கணக்குகள் இணைக்கப்பட்டிருப்பதால் ஆதார் அட்டையின் மூலம் உங்கள் பணத்தை எளிதாக கைப்பற்ற முடியும். இந்த சூழலிலிருந்து பாதுகாக்க UIDAI சார்பாக உங்கள் ஆதார் அட்டையை லாக் மற்றும் அன்லாக் செய்து கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி உங்கள் ஆதார் அட்டை தொலைந்து விட்டால் ஆதார் எண்ணை எளிதாக லாக் செய்யலாம். உங்கள் ஆதார் எண்ணை லாக் செய்ய:
முதலில் Virtual IDயின் 16 இலக்க எண் தேவைப்படும்.
இந்த எண்ணை பெற்றுக்கொள்ள 1947 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும்.
உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
அந்த SMS, GET OTP வகையில் இருக்கும்.
இந்த SMSல் உங்கள் ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கம் தேவைப்படும்.
பிறகு UIDAIயிலிருந்து ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
இந்த OTP எண்ணை பெற்ற பிறகு அதே எண்ணுக்கு மீண்டுமாக LOCK UID என்ற வகையில் SMS செய்யவும்.
இந்த SMSல் உங்கள் ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்க எண்ணுடன் OTP தேவைப்படும்.
பிறகு உங்கள் ஆதார் எண் UIDAIவால் லாக் செய்யப்படும்.
இதை உறுதிப்படுத்துவதற்கு உங்கள் மொபைல் எண்ணுக்கு SMS அனுப்பப்படும். ஆதார் எண்ணை UNLOCK செய்ய:
முதலில் Virtual IDயின் 16 இலக்க எண் தேவைப்படும்.
அதற்கு 1947 என்ற எண்ணுக்கு SMS அனுப்பி OTP எண்ணை பெற்று கொள்ள வேண்டும்.
அந்த Virtual IDயின் கடைசி நான்கு இலக்க எண்ணுடன் GET OTP Formatல் SMS அனுப்ப வேண்டும்.
பிறகு மீண்டுமாக உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
மீண்டுமாக Virtual IDயின் கடைசி நான்கு இலக்க எண்ணுடன், OTP எண்ணையும் சேர்த்து UNLOCK UID வகையில் SMS அனுப்ப வேண்டும்.
இந்த SMSஐ பெற்றுக்கொண்ட பிறகு UIDAIயிலிருந்து உங்கள் ஆதார் அட்டை UNLOCK செய்யப்படும்.
இதை உறுதிப்படுத்துவதற்கு உங்கள் மொபைல் எண்ணுக்கு SMS அனுப்பப்படும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews