தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆசிரியருக்கு கொரோனா! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, March 21, 2021

Comments:0

தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆசிரியருக்கு கொரோனா!

ஆவடியில் தடுப்பு ஊசி போட்டுக் கொண்ட ஆசிரியருக்கு மீண்டும் கொரொனா தொற்று ஏற்பட்ட நிலையில், தற்போது தொற்றுக்கு மொத்தமாக 101 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. திருவள்ளூர் மாவட்டதிற்கு உட்பட்ட ஆவடி மாநகராட்சி 48 வார்டுகள் அடங்கியது. தற்போது ஆவடி சுற்றுவட்டார பகுதியில் 101 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 33 பேருக்கு உறுதியானது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். 60 வயதுக்கு மேல் கடந்தவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனையிலும் 60 வயதுக்கு கீழே உள்ளவர்கள் பூவிருந்தவல்லி தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், ஆவடி சின்னம்மன் கோவில் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் வசிக்கும் அரசு உயர் நிலை பள்ளி ஆசிரியர் ஒருவர் கடந்த 6 தேதி தடுப்பு ஊசி போட்டுள்ளார். இதையடுத்து கடந்த 16ஆம் தேதி மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மீண்டும் ஆசிரியரை பரிசோதித்த போது அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் தனது வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டார். பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தடுப்பூசி போடப்பட்ட பின்பு பாதுகாப்புடன் இருக்க வேண்டும். முககவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என சுகாதாரத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர். ஆவடியில் அரசு பள்ளி ஆசிரியருக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி பின்பும் மீண்டும் கொரோனா தொற்றுக்கு ஆளானது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews