இன்றே கடைசி நாள்... ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்காவிட்டால் பான் கார்டு செல்லாது! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 31, 2021

Comments:0

இன்றே கடைசி நாள்... ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்காவிட்டால் பான் கார்டு செல்லாது!

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மார்ச் 31-ம் தேதியான இன்றே இறுதி நாளாகும். தனிமனித அடையாள ஆவணமான ஆதார் கார்டுகள் அனைத்து விஷயங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. பான் கார்டுகளையும் ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான கால அவகாசமும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடைசியாக சென்ற ஆண்டின் ஜூன் மாதம் மத்திய அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பில் பான் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கான கால அவகாசம் 2021 மார்ச் 31 வரையில் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பல முறை ஆதார் பான் இணைப்பிற்கான கால அவகாசத்தை நீட்டிப்பு செய்த மத்திய அரசு இந்த முறை நீட்டிக்காமல் மார்ச் 31-ம் தேதியான இன்றைக்குள் இணைக்க வேண்டும் என அறிவித்துள்ளது. தற்போதைய வருமான வரிச் சட்டத்தின்படி ஆதார் கார்டுடன் பான் எண் இணைக்கப்படாவிட்டால் அந்த பான் கார்டு செயலிழந்ததாக அறிவிக்கப்படும். மேலும், செயலிழந்த பான் கார்டுகளை 2021 ஏப்ரல் 1ம் தேதிக்கு மேல் பயன்படுத்த முடியாது. பான் கார்டு விவரங்களை வழங்காவிட்டால் வருமான வரிச் சட்டத்தின்படி ரூ.10,000 அபராதம் வசூலிக்கப்படும். புதிய நிதி மசோதாவின் படி, பான் கார்டை ஆதாருடன் இணைக்காதவர்களிடம் குறைந்தது 1000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதார் - பான் இணைப்பது எப்படி?
1. //www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.
2. Link Aadhaar என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
3. திரையில் தோன்றும் பக்கத்தில், பான் எண், ஆதார் எண், பெயர் (ஆதாரில் உள்ளபடி) ஆகியவற்றை டைப் செய்ய வேண்டும்.
4. ஆதாரில் பிறந்த தேதி முழுமையாக இல்லாமல் பிறந்த ஆண்டு மட்டும்தான் இருக்கிறது என்றால், I have only year of birth in Aadhaar Card என்பதை டிக் செய்யவும்.
5. விவரங்களை சோதித்து ஆதாரை இணைப்பதற்கு ஒப்புதல் வழங்க I agree to validate my Aadhaar details with UIDAI என்பதையும் டிக் செய்யவும். 6. Capcha எனப்படும் குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்து அல்லது ஓடிபி பெற்று Link Aadhaar பட்டனை கிளிக் செய்யவும்.
7. உங்கள் ஆதார்- பான் கார்டு இணைக்கப்பட்டு விடும்.
ஏற்கெனவே இணைக்கப்பட்டுள்ளதா என்பது உறுதி செய்ய:
மீண்டும் வருமான வரித்துறையின் இணையதளத்தின் Link Aadhaar பக்கத்திலேயே view status பகுதியை கிளிக் செய்து பான் மற்றும் ஆதார் எண்ணை டைப் செய்து உறுதி செய்து கொள்ள முடியும்.
ஏற்கெனவே உங்கள் பான் மற்றும் ஆதார் இணைக்கப்பட்டு இருந்தால் Your pan is Linked to Aadhaar Number XXXXXXXX என்ற செய்தி கிடைக்கும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews