தேர்தல் பயிற்சியில் பங்கேற்காத 200 அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ் - கலெக்டர் உத்தரவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 31, 2021

Comments:0

தேர்தல் பயிற்சியில் பங்கேற்காத 200 அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ் - கலெக்டர் உத்தரவு!

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் பணிபுரியும் 21,256 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த 26-ந் தேதி தேர்தல் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது இந்த பயிற்சியில் 1,444 பேர் பங்கேற்கவில்லை. இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் நாகராஜன் உத்தரவிட்டார். இதையடுத்து 800 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தாங்கள் தேர்தல் பணியில் பங்கேற்பதாக தெரி வித்தனர். 400 பேர் தங்களது உடல்நிலை குறித்த மருத்துவ ஆவணங்களை சமர்ப்பித்தனர்.
தடுப்பூசி போட்ட ஆசிரியை கொரோனாவுக்கு பலி மீதியுள்ள 200-க்கும் மேற் பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார். அவர் கள் 3-வது கட்ட பயிற்சியில் கலந்து கொள்ளவில்லை என்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக் டர் நாகராஜன் தெரிவித்து உள்ளார்.
பிளஸ் 2வுக்கு வகுப்பு உண்டா? குழப்பத்தை தீர்க்க கோரிக்கை!

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews