அரசு கலை கல்லுாரி மாணவர்கள், ஏப்., மே மாத பருவத்தேர்வுகளுக்கான தேர்வு கட்டணங்களை செலுத்த, கல்லுாரி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, கல்லுாரி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:
இக்கல்லுாரியில், ஏப்., மாத பருவத் தேர்வுகளுக்கான கட்டணம், நாளை முதல் செலுத்தலாம். நடப்பாண்டில் பயிலும் மாணவர்கள் கல்லுாரி படிப்பை முடித்து சென்று நிலுவை தேர்வுகளை எழுதவுள்ள மாணவர்கள், இளநிலை, முதுநிலை மாணவர்கள், www.gacbe.ac.in என்ற, கல்லுாரி இணையதளம் வாயிலாக, விண்ணப்ப கட்டணத்தை செலுத்தவேண்டும். தேர்வு கட்டண விபரங்கள், இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளன. ஏப்., 9ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். அபராதத்துடன், ஏப்., 11ம் தேதி வரையும், தட்கல் முறையில் ஏப்., 12 முதல் 13ம் தேதி வரையும் செலுத்தலாம். குறிப்பிட்ட தேதிக்கு பிறகு, தேர்வு கட்டணம் செலுத்துவது ஏற்றுக்கொள்ளப் படாது. 2014ம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பு படித்த மாணவர்கள், நிலுவைத்தாளுக்கான தேர்வுக்கட்டணம் செலுத்திய பிறகு, இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, அந்தந்த துறைத்தலைவர்களிடம் பழைய பாடத்திற்கு, இணையான நடப்பு கல்வி யாண்டு பாடத்திட்டத்தை, குறிப்பிட்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கட்டணம் செலுத்திய மாணவர்கள் மட்டுமே, தேர்வை எழுத அனுமதிக்கப்படுவர். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.