Breaking

Saturday, March 27, 2021

மார்ச் 31க்குள் செய்முறை தேர்வு

செய்முறை தேர்வுகளை, வரும் 31ம் தேதிக்குள் முடித்துக் கொள்ள, இன்ஜி., கல்லுாரிகளுக்கு, அண்ணா பல்கலை அறிவுறுத்தியுள்ளது. மாநிலம் முழுதும், கொரோனா பரவல் திடீரென அதிகரித்துள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கும், கொரோனா தொற்று பரவியது கண்டறியப்பட்டது. இதையடுத்து, பள்ளிகளுக்கு, மார்ச், 22 முதல், விடுமுறை விடப்பட்டது. கல்லுாரிகளுக்கு, நேற்று முன்தினம் முதல், விடுமுறை அளிக்கப்பட்டது. பள்ளிகளும், கல்லுாரிகளும் ஆன்லைனில் வகுப்புகளை நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்ஜினியரிங், மருத்துவம், சட்டம் உள்ளிட்ட, அனைத்து வகை கல்லுாரிகளிலும், 31ம் தேதிக்குள், நேரடி வகுப்புகள், செய்முறை மற்றும் தேர்வுகளை முடித்துக் கொள்ள, தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன் அறிவுறுத்தி "உள்ளார். இதன்படி, அனைத்து இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கும், அண்ணா பல்கலை அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அரசின் உத்தரவுப்படி, அனைத்து இன்ஜினியரிங் மாணவர்களுக்கும் செய்முறை பயிற்சி வகுப்புகள் மற்றும் செய்முறை தேர்வுகளை, வரும், 31க்குள் நடத்தி முடிக்க வேண்டும். அதன் பின், ஆன்லைனில் பாடங்களை நடத்திக் கொள்ளலாம். தேர்வுகள் முழுதும், ஆன்லைனிலேயே நடத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog