அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் ஊரில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் மாணவர் உட்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அப்பள்ளியில் படிக்கும் மற்ற மாணவர்களின் பெற்றோர்கள் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
கொரோனா தாக்கம்:
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்றினால் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கினால் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கான பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா தாக்கம் ஜனவரி மாத ஆரம்பத்தில் இருந்து குறையத்தொடங்கியதால் ஜனவரி 19ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.
அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா உறுதி – கல்லூரி 3 நாட்களுக்கு விடுமுறை!! பள்ளிகள் திறப்பு:
பள்ளிகள் திறக்க அனுமதியளித்தாலும் பள்ளிகள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு வெளியிட்டுள்ளது. பள்ளிகள் அனைத்தும் அரசின் பாதுகாப்பு நடவடிக்கைளை முறையாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளும் அரசின் பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் நோய்த்தடுப்பு செயல்முறைகளை முறையாக கடைப்பிடிக்கின்றது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை மாவட்ட வாரியாக - Media-Bulletin - 15.03.2021 - PDF
பள்ளியில் தொற்று:
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கீழப்பழுவூர் அருகே சுண்டக்குடி மேல்நிலைப்பள்ளியின் விடுதி மேற்பார்வையாளர் இரண்டு தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் பள்ளியின் அருகே உள்ள விடுதி சமையலர் 2 பேருக்கும் 10ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா உறுதி – கல்லூரி 3 நாட்களுக்கு விடுமுறை!!
பெற்றோர்கள் கோரிக்கை:
இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ட்டுள்ளனர். இவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை ரத்து செய்து, ஆன்லைன் முறையில் பாடங்களை நடத்த பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.