அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா உறுதி – கல்லூரி 3 நாட்களுக்கு விடுமுறை!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 15, 2021

Comments:0

அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா உறுதி – கல்லூரி 3 நாட்களுக்கு விடுமுறை!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு கொரோனா பரவல்: தமிழகத்தில் கொரோனா காரணமாக கல்வி நிறுவனங்கள் மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வந்தாலும் பள்ளிகள் தற்போது வரை திறக்கப்படவில்லை. கல்லூரி மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி இறுதியாண்டு மாணவர்களுக்கும், மற்ற மாணவர்களுக்கு பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. கல்லூரிகளில் கொரோனா பரவாமல் தடுக்க பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் கல்லூரிக்கு வரும் போது முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் போன்றவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இருந்த போதிலும் பல்வேறு கல்லூரிகளில் மாணவர்களுக்கு கொரோனா தாக்கம் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
1 முதல் 5ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் விரைவில் திறப்பு – நாகலாந்து மாநில அரசு அறிவிப்பு
திருச்சி – திண்டுக்கல் சாலையில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில் காட்டூர் பகுதியை சேர்ந்த இயற்பியல் துறை மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அரசு பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவருக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரி ஒன்றில் விலங்கியல், கணினி அறிவியல் பிரிவு மாணவர்கள் 4 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த மாணவர்கள் விடுதிகளில் இருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அக்கல்லூரியை சேர்ந்த மாணவி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு முகாமிலும், மாணவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியில் விலக்கு – அரசிடம் கோரிக்கை!!
கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் காரணமாக அரசு உதவி பெறும் கல்லூரிக்கு 15, 16, 17 ஆகிய தேதிகளில் விடுமுறை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை இந்த கல்லூரியில் உள்ள 250 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்தபின் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது கண்டறியப்படும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews