கொரோனா ஊரடங்கு கால பொதுத்தேர்வு டிப்ஸ்!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, March 06, 2021

Comments:0

கொரோனா ஊரடங்கு கால பொதுத்தேர்வு டிப்ஸ்!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே மாதம் 3 ஆம் தேதி நடைபெற உள்ளதால் அந்த மாணவர்களுக்கு எளிமையான முறையில் தேர்வு எழுதுவதற்கான குறிப்புகள் பின்வருமாறு,

இரட்டை பட்டங்களை வழங்கும் இந்திய, சா்வதேச உயா் கல்வி நிறுவனங்கள்: மக்களிடம் யுஜிசி கருத்துக் கேட்பு..
பொதுத்தேர்வு குறிப்புகள்:
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் 10 மாதங்களாக திறக்கப்படாததால் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எழுதுவதில் பல சிரமங்கள் உள்ளது. பொதுவாக பள்ளிகள் வழக்கமாக செயல்பட்டிருந்தால் மாணவர்களுக்கு மாதிரி தேர்வுகள் பல நடத்தப்பட்டிருக்கும். ஆனால் கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராகி வருகின்றனர். எனவே மாணவர்களுக்கு தேர்வு சுமையை குறைக்க சில எளிய குறிப்புகள் இதோ, *12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆன்லைன் மூலமாக பாடங்கள் படிப்பதை விட அந்த பாடங்களை நோட்டுகளில் எழுதி படிக்கலாம் அல்லது புத்தகங்களில் குறித்து படிக்க வேண்டும். இதன் காரணமாக மாணவர்களின் எண்ணங்கள் சிதறாமல் இருக்கும். *மாணவர்கள் அதிக நேரம் செல்போன், டிவி பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் இணைய வசதி குறித்து தகவல் கேட்கும் தேர்தல் ஆணையம்
*குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டதால் மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டம் குறித்து விளக்கம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். *மாணவர்கள் இன்றைய தினம் படிக்க வேண்டிய பாடங்கள் குறித்து முந்தைய நாள் இரவே திட்டமிட்டு கொள்ள வேண்டும். திட்டமிட்ட பாடங்களை அன்றே படித்து முடிக்க வேண்டும். *மாணவர்கள் இரவு அதிக நேரம் கண்விழித்து படிக்காமல், அதிகாலை எழுந்து படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். *தேர்வுக்கு தேவையான பொருள்களை முந்தைய நாளே திட்டமிட்டு எடுத்து வைக்க வேண்டும். *பொதுத்தேர்வு நடைபெறும் நேரத்தில் புதிய தலைப்புகளை படிப்பதை தவிர்க்க வேண்டும்.
இரட்டை பட்டங்களை வழங்கும் இந்திய, சா்வதேச உயா் கல்வி நிறுவனங்கள்: மக்களிடம் யுஜிசி கருத்துக் கேட்பு..
*தேர்வு நடைபெறும் நாள் அன்று காலை உணவு கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். *தேர்வு அறையில் வினாத்தாள்களை பெற்றதும், உடனே எழுத தொடங்காமல் அனைத்து பக்கங்களையும் புரட்டி பார்த்து அதன்பின் விடையளிக்க வேண்டும். *அறையில் தேர்வு எழுத அமர்ந்த பின் வினாத்தாள் குறித்த கலந்துரையாடல்களை தவிர்க்க வேண்டும். *முந்தைய நாள் தேர்வு அன்று சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் தேர்வு வினாத்தாள்கள் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம். *மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் போது பல முறை மாதிரி தேர்வுகளை எழுதி பார்த்து பின்னர் தேர்வு எழுத வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் இணைய வசதி குறித்து தகவல் கேட்கும் தேர்தல் ஆணையம்
*தேர்வு எழுத மாணவர்கள் ஒன்று அல்லது இரண்டு பேனாக்களை கொண்டு செல்ல வேண்டும். *கடந்த ஆண்டு நடத்தப்பட்ட பொதுத்தேர்வு வினாக்களை சேகரித்து மாணவர்கள் படிக்க வேண்டும். அதன் காரணமாக அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் தெரிந்து கொள்ளலாம். *தேர்வு அட்டவணை குறித்து தெளிவான விளக்கம் வேண்டும்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews