தமிழகத்தில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 22ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள நிலையில், 12ம் வகுப்பிற்கு விடுமுறை வழங்கி ஆன்லைன் வகுப்புகளை தொடர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
விடுமுறை கோரிக்கை:
தமிழகத்தில் கடந்த வருடம் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பள்ளிகள் கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு பின்னர் கடந்த ஜனவரி 19 முதல் மீண்டும் திறக்கப்பட்டது. பல்வேறு கருத்து கேட்பு கூட்டங்களுக்கு பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில் பிற வகுப்புகளுக்கு ஆன்லைன் கல்வி தொடரும் என தெரிவிக்கப்பட்டது.
நிரந்தர பணிக்கு ஆசிரியர் தேவை!
நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இருப்பினும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுக்கான வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தமிழக அரசின் தலைமை செயலாளர் அவர்களின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் 9 முதல் 11ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் மார்ச் 22ம் தேதி (திங்கட்கிழமை) முதல் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அரசின் மறுஉத்தரவு வரும் வரை இது அமலில் இருக்கும் என கூறப்பட்டது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால் அவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆசிரியருக்கு கொரோனா!
இது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த தமிழக அரசு, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகளை நடத்துவது சரியில்லை என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். எனவே 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் விடுமுறை அளித்து ஆன்லைன் வகுப்புகளை தொடர வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.