கொரோனா தடுப்பூசி போட தயங்கும் ஆசிரியர்கள் - கட்டாயப்படுத்துவதாக வேதனை
ஊதிய உயர்வில் உள்ள குளறுபடிகளை சரிசெய்து, புதிய அரசாணை வெளியிட வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவுத் துறை செயலாளர் மற்றும் கூட்டுறவு மாநில பதிவாளர் ஆகியோரை தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்க தலைவர் ஜி.ராஜேந்திரன், பொதுச்செயலாளர் பி.தினேஷ் குமார் சந்தித்து அளித்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது: தமிழக அரசு, நியாயவிலை கடை ஊழியர்களுக்கு கடந்த மாதம் ஊதிய உயர்வு அறிவித்துள்ளது. ஊதியக்குழு பரிந்துரையானது தற்பொழுது பெற்று வரும் அகவிலைப்படியையும் சேர்த்து வரும் கூடுதலுக்கு 10 சதவிகிதம் ஊதிய உயர்வு அளித்து புதிய அடிப்படை ஊதியம் கணக்கிடலாம் என குழு பரிந்துரைத்தது. ஆனால் அறிவிக்கப்பட்ட அரசாணையில் 5 சதவிகித ஊதிய உயர்வு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பணியாளர்கள் தற்போது 17 சதவிகித ஊதிய உயர்வு பெற்றுள்ளார்கள்.
குடிமை பணி தேர்வுக்கு இணைய வழி வகுப்பு!
எனவே நியாயவிலை கடை ஊழியர்களுக்கு 10 சதவிகித ஊதிய உயர்வை கண்டிப்பாக வழங்க வேண்டும். அதேபோன்று, அரசு அறிவித்துள்ள உத்தரவில் வீட்டு வாடகைபடிக்கும், நகர ஈட்டு படிக்கும் உச்சவரம்பு ரூ.1000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போட தயங்கும் ஆசிரியர்கள் - கட்டாயப்படுத்துவதாக வேதனை
சென்னை போன்ற பெரிய நகரங்களில் எப்படி 1000 ரூபாய்க்கு வீடு வாடகைக்கு கிடைக்குமா என்பதை பரிசீலித்து தளர்த்தப்பட வேண்டும். நியாயவிலை கடை பணியாளர்களுக்கு வழங்கப்படும் கடை படியானது கார்டு எண்ணிக்கையில் வழங்கப்படாமல் ஒரே சீராக கடை படி வழங்கப்பட வேண்டும். சக்தி சரவணன் கமிட்டி பரிந்துரைக்கப்பட்ட தேர்வு நிலை, சிறப்பு நிலை நியாயவிலை கடை பணியாளர்களுக்கு அமல்படுத்திய பின்னரே புதிய ஊதிய விகிதம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை பரிசீலித்து புதிய ஊதியம் பெறுவதற்கான மறுசீராய்வு அரசாணை வெளியிட வேண்டும். இவ்வாறு கூறி உள்ளனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.