Breaking

Sunday, February 07, 2021

ஒடிசா மாணவியின் படிப்புக்கு ரூ. 1 லட்சம் நிதி வழங்கிய திமுக எம்.பி

ஒடிசா மாணவியின் படிப்புக்கு ரூ. 1 லட்சம் நிதி வழங்கிய திமுக எம்.பி. செந்தில்குமாரின் செயல் சமூக வலைத்தளங்களில் பாராட்டைப் பெற்றுள்ளது.
ஒடிசாவைச் சேர்ந்த பட்டியலின மாணவி ருசுபோடா என்பவர் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் கூலி வேலை செய்து டிப்ளமோ படித்துள்ளார். தொடர்ந்து தான் பி.டெக் படிக்க வேண்டும் என்று உதவி கோரியுள்ளார். சமூக வலைத்தளத்தின் மூலமாக இதனை அறிந்த தருமபுரி திமுக எம்.பி. செந்தில்குமார், நேரில் சென்று மாணவிக்கு ரூ. 1 லட்சம் நிதி வழங்கியுள்ளார். மேலும், மாணவியின் மேற்படிப்புக்காக வங்கி மூலம் கடன் பெற்றுத்தர ஏற்பாடு செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளார். இவரது செயலை சமூக வலைத்தளத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

1 comment:

  1. Vazthugal iyya vazhga valamudan DMK mp iyya Thiru Senthil Kumar

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog