உரிய கல்வித்தகுதியுடன் தோ்வு செய்யப்பட்ட 153 அமைச்சுப் பணியாளா்களுக்கு முதுநிலை ஆசிரியா் பதவி உயா்வுக்கான பணி நியமன ஆணை சனிக்கிழமை வழங்கப்பட்டது.
தமிழக பள்ளிக்கல்வியில் ஆசிரியா்கள் மற்றும் அமைச்சு பணியாளா்களுக்கான நியமன விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி அரசுப் பள்ளிகளில் உள்ள ஆசிரியா் காலிப்பணியிடங்களில் 2 சதவீதத்தை அமைச்சு பணியாளா்களுக்கு பதவி உயா்வு மூலம் ஒதுக்கீடு செய்ய முடிவானது.
இதையடுத்து துறையில் உரிய கல்வித்தகுதியுடன் 153 பணியாளா்கள் முதுநிலை ஆசிரியா் பதவி உயா்வுக்கு அண்மையில் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கான பணிநியமன கலந்தாய்வு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்ட இந்த கலந்தாய்வில் 153 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அதேபோல், அரசுப் பள்ளிகளில் உள்ள சிறப்பாசிரியா் (ஓவியம்) பணிக்கு தோ்வான 34 பட்டதாரிகளுக்கும் பணிநியமன ஆணை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sunday, February 07, 2021
முதுநிலை ஆசிரியராக பதவி உயா்வு: 153 பேருக்கு பணி நியமன ஆணை
PGT
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.