11 மருத்துவக் கல்லூரிகளில் அவுட்சோர்ஸிங் முறையில் நியமனம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, February 17, 2021

Comments:0

11 மருத்துவக் கல்லூரிகளில் அவுட்சோர்ஸிங் முறையில் நியமனம்

தமிழகத்தில் புதிதாக அமைக்கப்படும் 11 அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கான ஆய்வக நுட்பனர்களை அவுட்சோர்ஸிங் முறையில் தேர்வு செய்ய எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
திருவள்ளூர், திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் உட்பட11 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லுாரி அமைக்கும் பணி நடக்கிறது. 11 மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் அவற்றுடன் இணைந்த மருத்துவமனைகளில் பணிபுரிய நிர்வாக ஊழியர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், ஆய்வக நுட்பனர்கள், துப்பரவு ஊழியர்கள் என தலா 900 முதல் 1000 பணியிடங்களை புதிதாக உருவாக்கி அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

12-ம் வகுப்பு பொதுதேர்வு தேதியை அறிவித்ததில் குழப்பமா? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

இதில் ஆய்வக நுட்பனர்கள், துப்புரவு ஊழியர்கள் மட்டும் &'அவுட்சோர்சிங்&' முறையில் நியமிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு பட்டதாரி மருத்துவ ஆய்வக வல்லுனர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதன் மாநில பொருளாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது: டாக்டர்களின் முதுகெலும்பே நாங்கள் தான். 200க்கும் மேற்பட்ட வகை பரிசோதனைகளை மேற்கொள்கிறோம். இதன் அடிப்படையில் தான் சிகிச்சைவழங்கப்படும். நோய்களை கண்டுபிடிப்பதே நாங்கள் தான். ஆனால் டாக்டர், செவிலியர் போன்று எங்களுக்கு நோயாளிகளுடன் நேரடியான தொடர்பு இல்லை. இதனால் இப்பணியின் முக்கியத்துவம் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.

வனத்துறையில் 248 காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி வழக்கு!

இதை சாதகமாக்கி இப்போது 11 மருத்துவக் கல்லுாரிகளின் 490 ஆய்வக நுட்பனர் பணியிடங்களை தனியாரிடம் தாரை வார்த்துள்ளது. இவர்கள் தனியாரிடம் சொற்ப ஊதியம் பெறவேண்டும். அரசு கல்வி நிறுவனங்கள் மூலம் மட்டும் ஆண்டுக்கு 2 ஆயிரம் ஆய்வக நுட்பனர்கள் வெளியில் வருகின்றனர். இவர்களின் அரசு வேலை கனவு கலைந்துவிட்டது. மற்ற பணியிடங்களை போல ஆய்வக நுட்பனர்கள் பணிக்கும் நிரந்தரமாக ஆட்களை தேர்வு செய்ய புதிய அரசாணை வெளியிட வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews