SMC/SMDC பயிற்சியில் பங்கேற்ற உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் விடுவித்து இயக்குனர் செயல்முறைகள் - PDF - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, February 17, 2021

Comments:0

SMC/SMDC பயிற்சியில் பங்கேற்ற உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் விடுவித்து இயக்குனர் செயல்முறைகள் - PDF

PG Promotion Counselling Reg - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - Dt: 16.02.21 - PDF

NMMS Exam Instructions Reg - அரசுத்தேர்வுத்துறை இயக்குநரின் செயல்முறைகள் - Dt: 16.02.21 - PDF SMC/SMDC பயிற்சியில் பங்கேற்ற உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் விடுவித்து இயக்குனர் செயல்முறைகள் CLICK HERE TO DOWNLOAD FULL PDF ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ், 2020-21ம் கல்வியாண்டிற்கான பள்ளி மேலாண்மைக் குழு/பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக்குழு (SMC/SMDC) உறுப்பினர்களுக்கான மேலாண்மைத் திறன் வளர்த்தல் மற்றும் விழிப்புணர்வு சார்ந்த பயிற்சி கோவிட்-19 சூழலில் இணையதள வழியாக ஜனவரி முதல் வாரத்தில் நடத்தப்பட்டுள்ளது.

மாவட்ட அளவில் பள்ளிகளில் நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழு/பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக்குழு (Training of SMC/SMDC) பயிற்சியில் பங்கேற்ற உறுப்பினர்களுக்கு மதிப்பூதியமாக ஒரு உறுப்பினருக்கு ரூ.100/- வீதம் (இணைப்பு 1-ல் உள்ளவாறு) பள்ளிகளுக்கு அனுப்புவதற்காக தொகை ரூ7,73,71,200/- (ரூபாய் ஏழு கோடி எழுபத்து மூன்று இலட்சத்து எழுபத்து ஒன்றாயிரத்து இருநூறு மட்டும்) (தொடக்கநிலை (20 உறுப்பினர்கள்): ரூ.6,25,56,000/- & இடைநிலை (24 உறுப்பினர்கள்): ரூ.1,48,15,200/-) மாவட்டங்களுக்கு நிதி விடுவிக்கப்படுகிறது.

மேலும், திட்ட ஏற்பளிப்புக்குழு ஒப்புதலின்படி மற்றொரு செயல்பாடாக பள்ளிகளில் தற்போதுள்ள சூழ்நிலைக்கேற்ப இணைப்பு-3ல் காணும் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு வாசகங்களை குறைந்தது தொடக்கநிலையில் 5 முதல் 8 வாசகங்களும், இடைநிலையில் 3 முதல் 5 வாசகங்களும் மாணவர்கள் பார்வையில்படும் வண்ணம் பள்ளி வகுப்பறைகள், உணவு அருந்தும் கூடங்கள், விளையாட்டு திடல்கள், பள்ளி சுற்றுச் சுவர்கள் (உட்புறம் மற்றும் வெளிப்புறம்), காலை வணக்கக் கூடம் ஆகிய இடங்களில் எழுதுவதற்கும் அறிவுறுத்தப்படுகிறது. இச்செயல்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியினை இணைப்பு 2-ல் உள்ளவாறு மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு விடுவிப்பதற்கும் அறிவுறுத்தப்படுகிறது. SMC/SMDC பயிற்சியில் பங்கேற்ற உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் விடுவித்து இயக்குனர் செயல்முறைகள் CLICK HERE TO DOWNLOAD FULL PDF பள்ளிகளில் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்படுவதை முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட அலுவலர்கள் (ADPC/APO/DEO/BEO/EDC/DC/BRTE) வாயிலாக உறுதி செய்தல் வேண்டும்.

மேற்காண் அனைத்துச் செலவினங்களையும் SMC/SMDC தீர்மானம் நிறைவேற்றி முறையாகச் செலவு செய்து (Receipts & Vouchers) உரிய ஆவணங்களைப் பராமரிக்க வேண்டும்.

பயன்பாட்டுச் சான்றிதழ் பள்ளிகளிலிருந்து முதன்மைக் கல்வி அலுவலருக்கு 23.02.2021 தேதிக்குள் அனுப்புதல் வேண்டும். மாநில திட்ட இயக்கக்கத்திற்கு 26.02.2021 தேதிக்குள் அனுப்புதல் வேண்டும்.

இச்செயல்பாடுகளின் மொத்த செலவினத் தொகையான ரூ. 10,03,88,570/- (ரூபாய் பத்து கோடி மூன்று இலட்சத்து எண்பத்து எட்டாயிரத்து ஐநூற்று எழுபது ரூபாய் மட்டும்) (தொடக்கநிலை: ரூ.8,26,26,920/- & இடைநிலை: ரூ.1,77,61,650/-) பள்ளி மேலாண்மைக் குழு/பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக்குழு (Training of SMCISMDC வ.எண்-69b&70b) என்ற தலைப்பின்கீழ் உள்ள நிதியிலிருந்து மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மேற்கண்ட அறிவுரைகளைப் பின்பற்றி அனைத்து நடைமுறைகளையும் முறையாக பின்பற்றவும் விடுவிக்கப்பட்ட நிதிக்கான செலவினத்தை மேற்கொள்ள அனைத்து மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் / முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு:
1. பள்ளி மேலாண்மைக் குழு/பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக்குழு (SMCISMDC) உறுப்பினர்களுக்கானநிதி விடுவிப்பு விவரம். (தொடக்கநிலை & இடைநிலை).
2. விழிப்புணர்வு வாசகங்களுக்கான செலவின விவரம். (தொடக்கநிலை & இடைநிலை).
3. விழிப்புணர்வு வாசகங்கள். SMC/SMDC பயிற்சியில் பங்கேற்ற உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் விடுவித்து இயக்குனர் செயல்முறைகள் CLICK HERE TO DOWNLOAD FULL PDF விழிப்புணர்வு வாசகங்கள் . விழிப்போடு இருப்போம் - விரட்டுவோம் கொரோனாவை • சுத்தமான கைகளே சுகாதாரத்தின் ஆதாரம்

முகக்கவசம் உயிர்க்கவசம் கூட்டமாய்க் கூட வேண்டாம் கொரோனாவைக் கூப்பிட வேண்டாம் முகத்தில் கவசம் அணிந்தே செல்லு முன்பின் இருப்போர்க்கும் தெளிவாய்ச் சொல்லு ஒழிப்போம் நாமே; கொரோனாவைத் தானே இடைவெளி விட்டு இருப்போம் நன்றாய் உலகில் பாதுகாப்பாய் இருப்போம் ஒன்றாய் கைகளில் கிருமி நாசினி பூசி கவனமாய் இருந்து உயிர்க்காத்து சுவாசி பகிர்ந்து உண்பது தவிர்ப்பது சிறப்பு பரவாமல் கொரோனாவை ஒழிப்பது நம் பொறுப்பு

• ஆறடி இடைவெளியில் இருப்போம் ஆண்டவனே வந்தாலும் கைகுலுக்க மறுப்போம்

• கிருமி நாசினியைத் தெளித்து கொரோனாவை வரவிடாமல் விரட்டு • நெடுந்துாரப் பயணத்தைத் தவிர்ப்போம் நெருங்கவரும் கொரோனாவை ஒழிப்போம் • அடிக்கடி கைகளைக் கழுவிடுவோம் நோய்த்தொற்று அண்டாமல் காத்திடுவோம் • வதந்திகளை நம்பி நாமும் அஞ்ச வேண்டாம் வழிகாட்டு நெறிமுறையை மிஞ்ச வேண்டாம் • தடுப்பூசி மருந்துகளை எடுத்துக் கொள்வோம் தாக்கவரும் கொரோனாவைத் தடுத்து வெல்வோம் • உறுதியாக விதிமுறைகளைப் பின்பற்று வோமே இறுதியாக்கி கொரோனாவை விரட்டுவோமே SMC/SMDC பயிற்சியில் பங்கேற்ற உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் விடுவித்து இயக்குனர் செயல்முறைகள் CLICK HERE TO DOWNLOAD FULL PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews