12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணையை ஒடிசா மாநில பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. மே மாதம் 3ம் தேதி முதல் தேர்வுகள் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் முழுவீச்சில் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
தேர்வு அட்டவணை:
ஒடிசாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பள்ளிகள் பல்வேறு விதிமுறைகளுக்கு உட்பட்டு மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன. ஜனவரி மாத தொடக்கத்தில் 10, 12ம் வகுப்புகளுக்கும், பிப்ரவரி 8ம் தேதி முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கின. இந்நிலையில் அம்மாநிலத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.
அதன்படி மே 3ம் தேதி தொடங்கும் தேர்வுகள் மே 15 வரை நடைபெறுகிறது. 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். முதல் மொழி தேர்வு மே 3 ம் தேதியும், இரண்டாம் மொழி (ஆங்கிலம்) தேர்வு மே 5 ம் தேதியும் நடைபெறும்.
மூன்றாம் மொழி (இந்தி) தேர்வு மே 7 ம் தேதியும், மூன்றாம் மொழியாக சமஸ்கிருதம் உள்ளவர்களுக்கு மே 8 ம் தேதியும் தேர்வுகள் நடைபெறும். கணித தேர்வு மே 10, அறிவியல் மே 12, சமூக அறிவியல் மே 15 அன்று நடைபெறும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு காலை 8 மணி முதல் 10 மணி வரை நடைபெறும். இருப்பினும், கணித தேர்வில் 15 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும்.
Search This Blog
Tuesday, February 09, 2021
Comments:0
Home
EXAMS
GOVT
TIME TABLE
12ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை - ஒடிசா மாநில பள்ளிக்கல்வித்துறை வெளியீடு
12ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை - ஒடிசா மாநில பள்ளிக்கல்வித்துறை வெளியீடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.