Breaking

Friday, February 05, 2021

பிப். 8 முதல் கல்லூரிகள் திறப்பு - வாரத்திற்கு 6 நாட்கள் வகுப்புகள்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

பிப்ரவரி 8 முதல் திறக்கப்படும் கல்லூரிகள் வாரத்திற்கு 6 நாட்கள் வகுப்புகள் நடக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கல்வியாண்டு முழுவதும் கல்லூரிகள் வாரத்திற்கு 6 நாட்கள் செயல்படும் என அரசாணை வெளியீடப்பட்டுள்ளது இந்த கல்வியாண்டு முழுவதும் கல்லூரிகள் வாரத்திற்கு 6 நாட்கள் செயல்படலாம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு குறித்த அறிவிப்பை அரசு வெளியிட்டது. அதில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கலை, அறிவியல், தொழில்நுட்ப, என்ஜினீயரிங், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் வருகிற 8-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் தொடங்க அனுமதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வரும் 8ந்தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் நிலையில் வாரத்திற்கு 6 நாட்கள் வகுப்புகள் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் பிப்.8 முதல் திறக்கப்படும் கல்லூரிகள் இந்த கல்வியாண்டு முழுவதும் வாரத்திற்கு 6 நாட்கள் செயல்படலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கலை, அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் டிப்ளமோ கல்லூரிகளில் படிக்கும் அனைத்து ஆண்டு மாணவர்களுக்கும் பிப்ரவரி 8-ம் தேதி முதல், வாரத்தில் 6 நாட்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. கரோனா ஊரடங்கு காரணமாகக் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கல்லூரிகள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டன. மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படாமல் இருக்க ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. அதேபோல இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையிலேயே தேர்வுகளும் நடத்தப்பட்டன. எனினும் முதலாமாண்டுக்கான 2-வது செமஸ்டர், இரண்டாமாண்டு மாணவர்களுக்கான 4-வது செமஸ்டர் மற்றும் முதுகலை மாணவர்களுக்கான 2-வது செமஸ்டர் தேர்வுகளும், அரியர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. தொற்றுப் பரவல் குறைந்தபிறகு இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கடந்த டிசம்பர் மாதம் 7-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. இந்நிலையில், கலை, அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் டிப்ளமோ கல்லூரிகளில் படிக்கும் அனைத்து ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு பிப்ரவரி 8-ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. பாடத்திட்டத்தை உரிய காலத்தில் முடித்துத் தேர்வுகளை நடத்த, வாரத்தில் 6 நாட்களுக்கு வகுப்புகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரோனா முன்னெச்சரிக்கை குறித்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அரசாணையை உயர் கல்வித்துறைச் செயலர் அபூர்வா வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog