பள்ளி கல்வி பணியாளர்களுக்கு, நான்கு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த, ஆசிரியர் பதவி உயர்வு, மீண்டும் வழங்கப்பட்டது.
பள்ளி கல்வித்துறை அலுவலக பணியாளர்களில், உரிய கல்வி தகுதி பெற்றவர்களுக்கு, அவர்களின் பணி மூப்பு அடிப்படையில், ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்படும். இந்த பதவி உயர்வு, நான்கு ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்படவில்லை.இது குறித்து, பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள், பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பனிடம் கோரிக்கை மனு அளித்தன.
அதையடுத்து, பதவி உயர்வுக்கு, அரசு அனுமதி அளித்தது., அதற்கான கவுன்சிலிங் நடத்தப்பட்டது. முதுநிலை ஆசிரியர்களாக, 153 பேர், ஓவிய ஆசிரியர்களாக, 34 மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை- - 2 பதவிக்கு, 5 பேர் என, 192 பேருக்கு, ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன், பணி நியமன உத்தரவை வழங்கினார். இணை இயக்குனர்கள் பொன்னையா, குமார் மற்றும் சுகன்யா ஆகியோர் உடனிருந்தனர்.
Sunday, February 07, 2021
அலுவலக பணியாளர்களுக்கு ஆசிரியர்களாக பதவி உயர்வு
TEACHERS
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.