Breaking

Tuesday, February 02, 2021

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தற்காலிக பயிற்றுநர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தற்காலிக பயிற்றுநர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது: பயிற்றுநர் (Welder) -1 பணியிடத்திற்கு கல்வித் தகுதி தேசிய தொழிற்சான்றிதழ் மற்றும் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழுடன், பற்றவைப்பவர் துறையில் 3 வருடம் பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். இப்பணியிடத்திற்கு ஒப்பந்த ஊதியம் ரூ.20,000 ஆகும். பயிற்றுநர் (Fitter) - 2 பணியிடத்திற்கு கல்வித் தகுதி தேசிய தொழிற்சான்றிதழ் மற்றும் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழுடன், பொருத்துநர் துறையில் 3 வருடம் பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். இப்பணியிடத்திற்கு ஒப்பந்த ஊதியம் ரூ.20,000 ஆகும். வயது வரம்பு அரசு விதிகளின் படி SC(A) 35, SC 35, ST 35, MBC 32, BC 32, OC 30, மாற்றுத்திறனாளிகள் 10 ஆண்டுகளும், ஆதவற்ற விதவைகளுக்கு 5 ஆண்டுகளும் அவரவர் இனத்திற்கேற்ப வயது வரம்பில் சலுகை உண்டு. 1.7.2020 அன்று 18 வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும். விண்ணப்பங்களை தலைவர், செயலாளர், பொது மற்றும் தனியார் கூட்டமைப்பு அரசு தொழிற்பயிற்சி நிலையம், புதுக்கோட்டை - 622 002 என்ற முகவரிக்கு 10.02.2021 மாலை 5 மணிக்குள் அனைத்து கல்வி சான்றிதழ் நகல்களுடன் அனுப்ப வேண்டும். மேலும் நேர்முகத்தேர்வு நடைபெறும் விவரம் பின்னர் தெரிவிக்கப்படும். தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மேற்கண்ட பதவிக்கான நியமனத்தை தள்ளி வைக்கவோ அல்லது ரத்து செய்திடவோ நியமன அலுவலருக்கு அதிகாரம் உள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog