பள்ளி மாணவ - மாணவியருக்கு, இலவச, 'லேப்டாப்' வழங்குவதற்காக, 5.32 லட்சம் லேப்டாப் கொள்முதல் செய்ய, 'எல்காட்' நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தமிழகத்தில், ஒவ்வொரு கல்வியாண்டிலும், பிளஸ் 1 மாணவ - மாணவியருக்கு, தமிழக அரசு சார்பில், இலவசமாக லேப்டாப் வழங்கப்படுகிறது.அந்த வகையில், நடப்பு கல்வியாண்டில், 5.19 லட்சம் பிளஸ் 1 மாணவர்கள்; 11 ஆயிரத்து, 553 முதலாம் ஆண்டு பாலிடெக்னிக் மாணவர்கள்; 463 மாற்றுத்திறனாளி பிளஸ் 1 மாணவர்கள்; கடந்த கல்வியாண்டில், பிளஸ் 1, பிளஸ் 2 படித்த, 1,293 மாற்றுத்திறனாளி மாணவர்கள் என, மொத்தம், 5.32 லட்சம் பேருக்கு, லேப்டாப் வழங்கப்பட உள்ளது.
அதற்கு தேவையான லேப்டாப்புகளை கொள்முதல் செய்வதற்காக, எல்காட் நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது. விரைவில் லேப்டாப் கொள்முதல் செய்யப்பட்டு, மாணவ - மாணவியருக்கு இலவசமாக வழங்கப்படும் என, எல்காட் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.