மாணவர்களுக்கு வழங்க 4 கோடி ஜிங்க், வைட்டமின் மாத்திரைகள் தயார் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 14, 2021

Comments:0

மாணவர்களுக்கு வழங்க 4 கோடி ஜிங்க், வைட்டமின் மாத்திரைகள் தயார்

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி மாணவர்களுக்கு வழங்க 4 கோடி ஜிங்க் மற்றும் வைட்டமின் மாத்திரைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் 19ம் தேதி முதல் துவங்கப்பட உள்ளன. இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பரவல் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வகையில், மாணவர்களுக்கு, மாத்திரைகள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 4 கோடி மாத்திரைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்,‘மாணவர்களுக்காக,4 கோடி மாத்திரைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இவை, அனைத்தும் பள்ளி கல்வித் துறைக்கு வழங்கப்பட்டுள்ள உரிய வழிக்காட்டுதல்படி மாணவர்களுக்கு வழங்கப்படும்’என்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews