இறைவணக்கம் இல்லை.. மாணவர்கள் சுற்றக் கூடாது பள்ளிகளில் கடைபிடிக்க வேண்டியது என்ன? வழிகாட்டு நெறிமுறை அரசு வெளியிட்டது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 14, 2021

Comments:0

இறைவணக்கம் இல்லை.. மாணவர்கள் சுற்றக் கூடாது பள்ளிகளில் கடைபிடிக்க வேண்டியது என்ன? வழிகாட்டு நெறிமுறை அரசு வெளியிட்டது

கொரோனா காலத்துக்கு பிறகு 19ம் தேதி முதல் பத்து மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்படுவதை அடுத்து வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி, வாரத்தில் 6 நாட்கள்கள் வகுப்புகள் நடக்கும். மாணவர்கள் விரும்பினால் பள்ளிக்கு வரலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 19ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதை அடுத்து, வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது. கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் பள்ளிக்கு வரமாட்டார்கள். கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியில் இருக்கும் பள்ளிகள் மட்டுமே திறக்கப்படும் என்பதால் சுகாதார மற்றும் பாதுகாப்பு குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழக அரசும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. * 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு 19ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும். பள்ளிகள் வாரத்தில் 6 நாட்கள் செயல்படும். * ஒரு வகுப்பில் 25 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும். * இணைய வழி, தொலைதூர கற்றல் முறை ஒரு மாற்று கற்பித்தல் முறையாக தொடரும். பள்ளிகள் இணைய வழியில் வகுப்புகளை நடத்தும் போது வீட்டில் இருந்து படிக்க மாணவர்கள் விரும்பினால் அனுமதிக்கலாம். * பெற்றோரின் எழுத்துப்பூர்வ இசைவுக் கடிதத்துடன் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவார்கள். * பெற்றோரின் சம்மதத்துடன் மாணவர்கள் வீட்டில் படிக்க விரும்பினால் அனுமதிக்கலாம். * வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழக்கப்படும். * பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள் தூய்மை செய்ய வேண்டும். * வகுப்பறைகளில் கைகளை தூய்மை செய்யும் கிருமி நாசினி வைக்க வேண்டும். அனைத்து கிருமி நாசினிகள்,உடல் வெப்ப கருவிகள் வைத்து பரிசோதிக்க வேண்டும். * கழிப்பறைகள் முறையாக சுத்தமாக பராமரிக்க வேண்டும். * சமூக இடைவெளி மற்றும் பள்ளி வளாகத்தில் கூட்டம் கூடக் கூடாது. * பள்ளிகளில் மாணவர்கள் சுற்றித் திரிவதை அனுமதிக்க கூடாது. * இறைவணக்கம், விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும். * வெவ்வேறு வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்வதற்காக வேறு வேறு நேரத்தை பரிந்துரை செய்ய வேண்டும். * கட்டுப்பாட்டு மண்டலங்களில் இருக்கும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நோய்த்தொற்று, தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்த பிறகே நோய்தொற்று இல்லை அறிவிக்கப்பட்ட பிறகே மாணவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். தனியார் பள்ளிகள் திறக்கலாமா? * தனியார் பள்ளி நிர்வாகங்கள், எழுத்துப் பூர்வ விருப்பத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அளித்த பிறகே தங்கள் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும். * மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்பதை கட்டாயப்படுத்த கூடாது. அது முழுக்க பெற்றோரின் சம்மதத்தை சார்ந்து இருக்க வேண்டும். * வீட்டில் படிக்க விரும்பும் மாணவர்களின் கற்றல் விளைவுகளின் முன்னேற்றத்துக்கு தக்க முறையில் திட்டமிட வேண்டும். * அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும் பள்ளி வளாகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews