தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பு படிக்கும் மாணவர்கள் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. மாணவர்களின் அனைத்து விவரங்களையும் சரிபார்த்து பிப்ரவரி 6ம் தேதிக்குள் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். திருத்தம் இருந்தால் பிப்ரவரி 1ம் தேதி முதல் 11ம் தேதி வரை இணையதளத்தில் செய்ய வேண்டும். அதேபோல பள்ளிகளின் விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். உறுதி மொழிப் படிவத்தில் மாணவர்களின் பெற்றோர் கண்டிப்பாக கையொப்பம் இட வேண்டும். தேர்வுக் கட்டணம்: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள அனைத்து பள்ளி மாணவர்களும், தேர்வுக் கட்டணம் 100, மதிப்பெண் சான்று கட்டணம் 10, சேவைக் கட்டணம் 5, என மொத்தம் 115 செலுத்த வேண்டும்.
பிளஸ்1 வகுப்பு மாணவர்கள் செய்முறைத் தேர்வுகள் அடங்கிய பாடத் தொகுப்பு படிப்போர் தேர்வுக் கட்டணம் 200, மதிப்பெண் சான்று கட்டணம் 20, சேவைக்கட்டணம் 5 என மொத்தம் ₹225 செலுத்த வேண்டும். செய்முறை இல்லாத பாடங்கள் அடங்கிய தொகுப்பில் படிப்போர், தேர்வுக் கட்டணமாக 150, மதிப்பெண் சான்று கட்டணம் 20, சேவைக்கட்டணம் 5, என மொத்தம் 175 என மாணவர்களிடம் தேர்வுக் கட்டணம் பெற வேண்டும். தமிழை பயிற்று மொழியாக கொண்டு தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது, அதேபோல அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழி தவிர இதர பயிற்று மொழி படிக்கும் எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி, எம்பிசி, பிரிவினருக்கும், கண்பார்வையற்றோர், கேட்கும் திறன், பேசும் திறன் அற்றவர்களுக்கும் தேர்வுக் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
Search This Blog
Thursday, January 28, 2021
Comments:0
தேர்வுத்துறை அறிவிப்பு: 10ம் வகுப்பு, பிளஸ்1 தேர்வுக்கு கட்டணம் எவ்வளவு?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.