அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் வரும் பிப்ரவரி 2}ஆம் தேதி முதல் நடத்த உள்ள தொடர் மறியல் போராட்டத்துக்கான ஆயத்த மாநாடு மதுரை அரசரடி யு.சி. மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
சென்னையில் இருந்து காணொலி வாயிலாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர்பேசினர்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: திமுக ஆட்சிக் காலத்தில் தான் அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம், ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணமாகப் பெற்றுக் கொள்வது, வீட்டுக் கடன், வாகனக் கடன், மருத்துவக் காப்பீடு, மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகரான அகவிலைப்படி, கலந்தாய்வு முறையில் வெளிப்படையான பணியிடமாறுதல் என பல்வேறு சலுகைகள் கொண்டு வரப்பட்டது.
திமுக அரசு அமைந்ததும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றார்.
அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மு.அன்பரசு, மாநிலப் பொதுச் செயலர் ஆ.செல்வம், சத்துணவு ஊழியர் சங்க மாநிலப் பொதுச் செயலர் ஏ.நூர்ஜஹான், ஜாக்டோ ஜியோ மாநில
ஒருங்கிணைப்பாளர்கள் அ.மாயவன், இரா.தாஸ், கு.வெங்கடேசன், கே.பி.ஓ.சுரேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Search This Blog
Thursday, January 28, 2021
Comments:0
அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: மு.க.ஸ்டாலின் உறுதி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.