அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் Computer Operator& Programming Assistant பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, December 18, 2020

Comments:0

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் Computer Operator& Programming Assistant பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
புதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள கம்ப்யூட்டர் ஆபரேட்டர் அண்ட் புரோகிராமிங் அஸிஸ்டெண்ட் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் இது குறித்து புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் திரு எஸ் ராமர் அவர்கள் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள 2 பயிற்றுனர்கள் (கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் புரோகிராமிங் அஸிஸ்டெண்ட்) பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பும் பொருட்டு கீழ்காணும் தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பங்கள் தங்களது விண்ணப்பத்தில் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி அனைத்து சான்றிதழ்களின் நகலை தன்கையொப்பமிட்டு இணைத்து முதல்வர் அரசினர் தொழில் பயிற்சி நிலையம் புதுக்கோட்டை 622 122 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணியிடங்களின் விவரங்கள்: நிரப்பப்படும் பணியிடம் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் ப்ரோக்ராமிங் அசிஸ்டன்ட் போது முன்னுரிமை காலியிடம் 1, தாழ்த்தப்பட்டோர் (அருந்ததியினர்) முன்னுரிமை (பெண்கள் ,ஆதரவற்ற விதவை) காலியிடம் 1, தொகுப்பூதியம் ரூபாய் 20 ஆயிரம் வழங்கப்படும் எனவும் கல்வி தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்கல்வி மூன்று வருடம் பட்டயப் படிப்பு அங்கீகரிக்கப்பட்ட வாரியம் ,கணினி அறிவியல் நிறுவனம், தகவல் தொழில்நுட்பம் இத்துடன் தொடர்புடைய துறையில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் புரோகிராமிங் அஸிஸ்டெண்ட் தேசிய தொழில் பழகுனர் சான்றிதழ் அல்லது தேசிய தொழிற் சான்று மற்றும் தேசிய கைவினைஞர் பயிற்றுனர் சான்றிதழ் துறையில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. CLICK HERE TO DOWNLOAD PDF NOTIFICATION FILE 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews