கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் பாடம் பயிற்றுவிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு முன் வழக்கறிஞர் அழகுமணி ஆஜராகி முறையிட்டதாவது: தமிழகத்திலுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தமிழ் பயிற்றுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது. அப்பள்ளிகளில் முதலாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தமிழ் விருப்பப்பாடமாக இடம்பெற வேண்டும். தமிழாசிரியர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும் என கட்டடத் தொழிலாளர் சங்க நிர்வாகி பொன்.குமார் மனு செய்ய அனுமதிக்க வேண்டும். அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றார்.
நீதிபதிகள்: மனு செய்யும்பட்சத்தில் இன்று (நவ.,20) விசாரிக்கப்படும். கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் நிலை மற்றும் வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளதா என மத்திய அரசு வழக்கறிஞர் விபரம் பெற்று தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.