Breaking

Thursday, November 05, 2020

மருத்துவ படிப்பு கட்டணம் எவ்வளவு?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
எம்.பி.பி.எஸ்., -- பி.டி.எஸ்., படிப்பில் சேரும்போது, கல்லுாரியின் ஆண்டு கட்டணத்தை பார்த்து தேர்ந்தெடுக்கும்படி, மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது.கட்டண விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. மாணவர் சேர்க்கைக்கு முன், தனியார் மருத்துவக் கல்லுாரியில் உள்ள, அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கட்டணத்தை பார்த்து, கல்லுாரியை தேர்ந்தெடுக்க வேண்டும் என, மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது.
இதன்படி, அரசு மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, 13 ஆயிரத்து, 610 ரூபாய்; பி.டி.எஸ்., படிப்புக்கு, 11 ஆயிரத்து, 610 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து தனியார் பல் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ்., இடங்களுக்கு, 2.50 லட்சம் ரூபாய்; நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 6 லட்சம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளளது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, 9 லட்சம் ரூபாய் கட்டணம்.ஆனால், தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான இடங்களுக்கு, கல்லுாரியின் உட்கட்டமைப்பு வசதிக்கேற்ப, கட்டணம் மாறுபடுகிறது.

தனியார் கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., கட்டண விபரம்

கல்லுாரிகள் அரசுஒதுக்கீடு நிர்வாக ஒதுக்கீடு (ரூபாயில்) (ரூபாயில்)

தாகூர் மருத்துவக் கல்லுாரி, சென்னை 3.85 லட்சம் 12.50 லட்சம்

கற்பகம் மருத்துவக் கல்லுாரி, கோவை 3.90 லட்சம் 12.50 லட்சம்

பி.எஸ்.ஜி., மருத்துவக் கல்லுாரி, கோவை 4 லட்சம் 12.50 லட்சம்

கற்பக வினாயக மருத்துவக் கல்லுாரி, காஞ்சிபுரம் 3.85 லட்சம் 12.50 லட்சம்

மேல்மருவத்துார் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லுாரி, காஞ்சிபுரம் 3.60 லட்சம் 12.50 லட்சம்

ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லுாரி, கன்னியாகுமரி 3.90 லட்சம் 12.50 லட்சம் வேலம்மாள் மருத்துவக் கல்லுாரி, மதுரை 4.15 லட்சம் 12.50 லட்சம்
தனலட்சுமி, ஸ்ரீனிவாசன் மருத்துவக் கல்லுாரி, பெரம்பலுார் 4 லட்சம் 12.50 லட்சம்
அன்னபூர்ணா மருத்துவக் கல்லுாரி, சேலம் 3.85 லட்சம் 12.50 லட்சம்
எஸ்.ஆர்.எம்., மருத்துவக் கல்லுாரி, திருச்சி 3.85 லட்சம் 12.50 லட்சம்
கே.எம்.சி.எச்., மருத்துவக் கல்லுாரி, கோவை 3.85லட்சம் 12.50 லட்சம்
மாதா மருத்துவக் கல்லுாரி, சென்னை 3.85 லட்சம் 12.50 லட்சம்
பனிமலர் மருத்துவக் கல்லுாரி, சென்னை 4 லட்சம் 12.50 லட்சம்
வேலுார் சி.எம்.சி., மருத்துவக் கல்லுாரி 0 48,330
வெளிநாட்டு வாழ் இந்தியர் 0 23.50 லட்சம் 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog